பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

145

ஜேம்ஸ் ஆலன்


உண்மையில் ஒரு மனிதனாகின்றான். சமூகம் முதலில் அவனிடம் நம்பிக்கை வைத்து முடிவில் அவனுடைய சொந்த குணநலன்களுடனே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒருவனாகிவிடுகிறான்.

விரைவிலோ பிற்பட்டோ மனிதர் அனைவரும் அறிவுரைக்காகத் தற்சார்புடைய மனிதேைய நாடுவர். சிறந்த மனங்கள் அவரை ஓர் ஊன்றுகோலாகப் பயன்படுத்திக் கொள்ளாத போதிலும், அவர்தம் பணியையும், பயனையும் உயர்வாகப் பாராட்டி, முன்பு சென்று மறைந்த தெய்வங்களுள் அவருக்கும் ஓர் இடம் உண்டு என்பதை ஒப்புக் கொள்ளுவர்.

கல்வியை வெறுப்பதே தற்சார்பின் சுட்டுக் காட்டெனக் கருதிவிடுதல் கூடாது. அத்தகைய மனப்பான்மை, வலிமையின்மையின் கூறுகளைக் கொண்ட முரண்டான தற்பெருமையினின்றும் தோன்றுவதாகுமென்பதோடு, வீழ்ச்சியின் முன்னறிவிப்பும் ஆகுமே அன்றித் தன்னம்பிக்கையின் தனிச்சிறப்புப் பண்புகளாகிய வலிமையின் கூறுகளோ உயர்ந்த பேறுபெறும் உறுதிப்பாடோ ஆகாது. இறுமாப்பையும், பகட்டையும் தன்னம்பிக்கையுடன் தொடர்புபடுத்தவே கூடாது. தற்சார்பு மேன்மையுறச் செய்கின்ற வேளையில் அவை இழிவுபடுத்துகின்றன. பணம், ஆடை, சொத்து, தன்மதிப்பு, பதவி ஆகிய தற்செயல் விளைவுகளையும், துணைப்பொருள்களையும் அடிப்படையாகக் கொண்டதே