பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 158



2) சிக்கனம் – ஆற்றலை ஒருமுகப்படுத்தல், முதலீடு, ஒழுக்கநெறி இரண்டையுமே பாதுகாத்தல், இரண்டாவதாகக் கூறப்பட்டிருப்பது மனத்தின் முதலீடு; ஆகவே, அதுவே சிறப்பு வாய்ந்தது.

3) சால்பு – நன்னெறியினின்னும் திரும்பாத நேர்மை; இழப்பு அன்றி ஆக்கம் என்ற நோக்கங்கள் அனைத்திலிருந்தும் விலகி வாக்குறுதிகள், உடன்பாடுகள், ஒப்பந்தங்கள் அனைத்தையும் சிறிதும் தவறாது நிறைவேற்றுதல்.

4) முறைப்பாடு – நடைமுறை விவரங்கள் அனைத்தையும் ஒழுங்கமைதிக்கு உட்படுவனவாக்கல். அதன் காரணமாகப் பலவற்றை ஒன்றாகக் குறைத்து விடுவதால், தேவைக்கு மிகுதியான உழைப்பினின்றும், களைப்பினின்றும் நினைவாற்றலையும், மனத்தையும் விடுவித்தல்.

5) இரக்கம் – மேதகைமை, பெருந்தன்மை, மென்மை, ஈகை, திறந்த கைனாக, தன்னுரிமை உடையவனாக, அன்புடையவனாக இருத்தல்.

6) இயல்பார்வம் – நிறைந்த நல்லன்பு உடையவனாகவும், முழுமை உடையவனாகவும், வலிமை உடையவனாகவும், உண்மையுடையவனாகவும் இருத்தல். பொது இடத்தில் ஒரு வகை ஆளாகவும், தனிமையில் பிறிதொரு வகை ஆளாகவும் இல்லாதிருத்தல்.