பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

ஜேம்ஸ் ஆலன்


நெருங்கிய நேயம் கொண்டவராகி விடுகின்றனர். உடனேயோ பின்போ இவர்கள் அவர்களின் வயப்பட்டுத் தம் கை முதலை இழக்கும்படி அவர்கள் செய்து விடுகின்றனர். நேர்மையான கைம்மாறு செய்யாது கவர்ந்து கொள்ள வேண்டுமென்ற விருப்பத்தை அதன் எல்லைக்கே எடுத்துச் செல்லுகின்ற மனிதரையன்றி யார் திருடர்? நேர்மையான தொழில் அனைத்திலும் இதுவே பெரிய அடிநிலை முறையாகும். அதே போது ஆன்மீகக் காரியங்களில் இது பிறர் நமக்குச் செய்ய வேண்டுமென்று நாம் எதிர்பார்ப்பதை நாம் பிறர்க்குச் செய்வதாகும்; உலக ஆற்றல்களுடன் பொருத்திப் பார்க்கையில் “செயலும் செயல் விளைவும் சமமேயாகும்” என்னும் வாய்பாடாக அறிவியல் பாங்கில் கூறப்படுகின்றது.

   மனித வாழ்வு பரிமாற்றத்திற் குட்படுவதே அன்றிப் பறித்தெடுத்துக் கொள்ளப்படுவதன்று. பிறர் அனைவரையும் தனது முறைப்படியான இரையாகக் கருதுகின்ற மனிதன், தான் ஆக்கப் பாதையினின்றும் மிகவும் அப்பாற்பட்டு அழிவென்னும் பாலை வனத்தில் முடங்கிக் கிடப்பதை விரைவில் கண்டு கொள்வான். மேலும், நாணயமான மனிதருடன் வெற்றிகரமாகக் கொண்டுசெலுத்த முடியாத அளவில் உள்ளது சிறத்தல் முறையில் மிகவும் பின் தங்கி விடுகின்றான். தகுதியுடையோர், சிறந்தோர் எப்போதும் தொடர்ந்து வாழ்கின்றனர். எனவே, இவன் இருப்பதால் தொடர்ந்து நடத்த முடிவதில்லை. இவன் காலத்தால் மாறிக் கொள்ளவில்லையெனின், இவனுடைய முடிவு சிறைச்சாலையாகவோ, அருவருப்பான குடிசையாகவோ ஒதுக்கப்பட்ட போக்கிரிகளின் இடமாகவோ இருக்கும்.