உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெற்றி நமதே.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழிய வங்கம் 26 தமிழக முதல்வர் அவர்கள், வங்கதேச வெற்றி குறித்த பாராட்டுத் தீர்மானத்தை 17-12- 1971-ல் தமிழகச் சட்டப் பேரவை யில் முன்மொழிந்து ஆற்றிய முன்னு ரையும் முடிப்புரையும் இங்கே தொகுத் துத் தரப்பெறுகின்றன. தீர்மானம் 'வங்காள தேசத்தின் உரிமைப் போராட்டம் வெற்றிகரமாக முடிந்து, சுதந்திர வங்காள தேசம் உதயமானதற்கு இந்தப் பேரவை தனது பாராட்டு தல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. வங்காள தேசத்தின் உரிமைப் போருக்கு மனிதா பிமான உணர்வுடன் ஆதரவு தந்து, பாகிஸ் தானின் போர்வெறிக்குத் தக்கபாடம் கற்பித்த இந்தியத் தலைமை அமைச்சர் இந்திரா காந்தி அவர்களுக்கு இந்தப் பேரவை பாராட்டுகளைக் குவிக்கிறது. இன்னுயிர் தந்தும், இழப்புக்களை ஏற்றும் இந்திய இந்தத் தியாகப் போரில் ஈடுபட்ட வீரர்கள்-வங்க தேச விடுதலை வீரர்கள் அனைவருக்கும் இந்தப் பேரவை தனது யாதையைத் தெரிவித்துக் கொள்கிறது. மரி மலர்ந்துள்ள புதிய வங்காள தேசத்தின் விடுதலை வீரர் முஜிபுர் ரகிமானை உடனடியாக விடுதலை செய்வதற்கு அனைத்து நாடுகளும் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டுமென்று இந்தப் பேரவை வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இந்த விடுதலைப் போரில் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவுடன் ஒத்துழைக்கா ததையும் இந்தியாவுக்கு விரோதமாக பாகிஸ்தா னுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதையும் கண்டிப்பதோடு, இந்தியாவுக்குத் துணை நின்ற சோவியத் யூனியன் போன்ற நாடுகளுக்கு இந் தப் பேரவை இதய பூர்வமான நன்றியைத் தெரி வித்துக் கொள்ளவும் செய்கிறது.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெற்றி_நமதே.pdf/28&oldid=1706862" இலிருந்து மீள்விக்கப்பட்டது