உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெற்றி நமதே.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 பாகிஸ்தானின் சரணாகதிப் படலம் பன்னிரண்டு நாட்களாக நடைபெற்ற இந்தப் போராட் டத்தில் மாபெரும் வெற்றியை- மகத்தான வெற்றியை இந்தியா பெற்றுத் தந்திருக்கிறது. வங்க பாகிஸ்தானின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டுவந்த கிழக்கு மக்கள் ஜனநாயக முறையிலே எழுப்பிய தங்கள் உரிமைக் குரல், பாகிஸ்தானத்தினுடைய சர்வாதிகாரிகளால் அலட்சியப்படுத்தப்பட்ட காரணத்தால், அந்த உரிமைக் குரல் விடுதலைக் குரலாக மாறி, பாகிஸ்தானத்தின் சர்வாதி காரிகளுடைய அட்டூழியங்கள் அளவு மீறி, அந்தப் பகுதி மக்கள் பெரும் கொடுமைக்கு ஆளாகி, அவர்கள் ஆர்த் தெழுந்து விடுதலை முரசை வேகமாகத் தட்டி, மனிதாபி மான உணர்ச்சியுடன் அரசியல் தீர்வு காணவேண்டிய ஒரு பிரச்சினையைப் பாகிஸ்தானத்தினுடைய அதிபர் யாகியா கான் புறக்கணித்துவிட்ட காரணத்தினால் அனைத்துலக நாடு களுக்கும் அந்தப் பேருண்மையை எடுத்துச் சொல்ல, அனைத் துலக நாடுகளில் நம்பக்கம் இருக்கின்ற நாடுகளின் பேராதர வினை எல்லாம் ஒருங்கே பெற்று, இந்தியாவினுடைய தலைமை அமைச்சர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் இந்தப் போராட்டத்தில் பெரிய வெற்றியினை ஈட்டித் தந்திருக் கிறார்கள். பத்து நாளில் யுத்தம் என்று யாகியாகான் முதலிலே முழங்கினார். இதுவே கடைசி யுத்தம் என்று பின்பு சொன்னார். இப்போது ஐ.நா. மன்றத்திற்குச் சென்றிருக்கிற பாகிஸ் தானத்தினுடைய= நியமிக்கப்பட்ட உதவிப் பிரதமர் பூட்டோ அவர்கள் ஆயிரம் ஆண்டுக் காலம் இந்த யுத்தம் நடைபெறும் என்று ஆரூடம் கணித்திருக்கிறார். ஆனால் அவர் களுடைய பேச்சுக்கள் கேலிக்குரியதாக, கிண்டலுக்குரிய தாக ஆக்கப்பட்டன என்பதற்கு அடையாளமாகத்தான் இன்று வங்காள தேசம் சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்டு, அதிலே மகத்தான வெற்றியினைப் பெற்றிருக்கிறது. அந்த வற்றிக்குத் தலைமை அமைச்சர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் தந்த பேராதரவும், இந்திய இராணுவ வீரர்கள் காட்டிய ஆர்வமும், தங்களுடைய உயிரையும் பொருட்படுத் தாமல் போர்களிலே அவர்கள் புரிந்த சாதனைகளும், முப் படைத் தளபதிகளும், அதிலே அணிவகுத்து நின்ற வீரர் களும் நடத்திய திறமைமிக்க போராட்டமுமே காரணமாகும். உறுதி இறுதி நேரத்திலேகூடப் போராடி, வங்கதேசத்தினுடைய தலைநகரம் டாக்காவைப் பிடித்துவிடலாம் என்ற இருந்தாலும் மனிதாபிமான உணர்ச்சியோடு, எதிரியினுடைய வீரர்கள் அனைவருக்கும், தலைநகரில் இருக்கிற மக்கள் அனைவ ருக்கும் தொல்லைகள் ஏற்படுத்த விரும்பாத இந்தியா, அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெற்றி_நமதே.pdf/29&oldid=1706863" இலிருந்து மீள்விக்கப்பட்டது