உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெற்றி நமதே.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 க்குக் காலக்கெடு அளித்து, இன்னும் சில மணி நேரம் ண்டும் நாங்கள் யோசிப்பதற்கு-சிந்திப்பதற்கு என்று கேட்டதற்கு அதையும் வழங்கி, அதற்குப்பின் பாகிஸ்தானத் னுடைய தளபதியின் சரணாகதிப் படலத்தை ஏற்றுக் காண்டிருக்கிறது. வானளாவிப் பறக்கிறது வங்க தேசக் கொடி இன்றைக்கு வங்கதேசம் விடுதலை பெற்று விட்டது ; சுதந்திர நாடாக ஆசி கிவிட்டது. அந்த நாட்டினுடைய கொடி பட்டொளி வீசி, முகிலைத் தொடப்பறக்க இருக்கிறது- பறக்கிறது. உரிமைக் குரல் கொடுத்த மாவீரனை விடுதலை செய்க! எல்லா இதே நேரத்தில் இந்த மண்ணினுடைய உரிமைக்குக் குரல் கொடுத்த மாவீரன், இந்த மண்ணினுடைய விடுதலைக்கு முழக்கமிட்ட கர்ம வீரன் முஜிபுர் ரகிமான் மேற்குப் பாகிஸ் தான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருப்பதை, அந்த மாவீரனுடைய விடுதலைக்கு உலக நாடுகளில் இருக்கின்ற எல்லா மக்களும் நான் நாடுகளைச் சொல்லவில்லை- மக்களும் மனிதாபிமான உணர்ச்சியோடு அவரை விடுதலை செய்ய விருப்பம் கொண்டிருப்பதை அனைவரும் அறிவோம். ஆகவே, நாம் விடுதலை பெற்றிருக்கிற வங்கதேச விடுதலை வீரர் முஜிபுர் ரகிமானை உடனடியாக விடுதலை செய்வதற்கு எல்லா நாடுகளும் முயற்சியினை மேற்கொள்ள வேண்டுமென்ற தீர்மானத்தை இந்தப் பேரவையிலே நிறைவேற்றியிருக் கிறோம். நான் ஏற்கெனவே வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த வுடன் ஒரு கூட்டத்தில், இந்தியாவைச் சில நாடுகள் புறக் கணிக்கின்றன—அலட்சியப்படுத்துகின்றன என்றால், நாம் பெற இருக்கின்ற வெற்றிகள் அந்த அலட்சிய மனப்பான் மையைப் போக்கிவிடும் ; நாம் பெற்றுக் கொடுக்கிற அந்த வெற்றி,மேலும் அகில உலகில் நமக்கு ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுத் தரும் என்று தெரிவித்ததைப்போல இன்றைக்கு அந்த வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். வெற்றிக்கு முழுமுதல் காரணமாக இருந்த நம்முடைய படைவீரர்கள் அனைவருக்கும், வங்கதேச விடுதலை வீரர்கள் அனைவருக்கும் தலைவணங்கி வாழ்த்துத் தெரிவித் துக்கொள்வதோடு இந்த வெற்றியின் தலைவி இந்திய மண்ணின் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்களுக்கும் நான் நம்முடைய பாராட்டுதல்களைத் தெரிவித் துக் கொள்கிறேன். C

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெற்றி_நமதே.pdf/30&oldid=1706864" இலிருந்து மீள்விக்கப்பட்டது