பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பகைவர் படையெடுப்பு

209

ஒரு பாவமும் அறியாத, அந்தண இளைஞன் வேடத்தில் ‘மாணகனாக’ இருக்கும் அவனைப் பார்த்த எவரும் அந்தத் தோற்றத்திற்குள் அவ்வளவு திறமை அடங்கியிருப்பதை நம்பவே மாட்டார்கள். மறு நாளிலிருந்து யாழிசையில் தேர்ந்தவன் என்ற முறையில் பதுமை, யாப்பியாயினி ஆகியோர் அவனிடம் நெருங்கிப் பழகும்நேரம் அதிகரித்தது. இருவரும் அவனிடம் யாழ் கற்கும் மாணவிகளைப் போலப் பழகினர். “மறைகளில் தேர்ந்த அந்தண இளைஞரே! உருவத்தைக் கண்டே மனிதர்களின் திறமையை அறிந்து கொள்ளும்படி நான்முகன் மனிதர்களைப் படைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? பயனற்ற கொன்றைக் காய்க்குப் பெரிய உருவத்தையும் பயன் மிக்க பயறுகளின் தானிய மணிகளடங்கிய நெற்றுக்களுக்குச் சிறிய உருவத்தையும் கொடுத்திருக்கிறான். அதேபோல இனிய சுவை மிக்க கரும்பின் உருவையும் பருமனையும் சிறிதாகவும், மூங்கிலைப் பெரியதாகவும் பிரமன் படைத்திருக்கிறான்! யானையை அடக்கியாளும் அளவிற்கு யாழிசையைத் தெய்வீக முறையிலே கற்றிருக்கும் உதயணனைக் காட்டிலும் சிறந்த கலைஞராக நீர் தோன்றுகிறீர். ஆயினும், உருவத்தைக் கண்டே உம் கலைத் திறத்தை அறிந்துகொண்டுவிடுமாறு நான்முகன் உம்மைப் படைக்கவில்லையே?” என்று யாப்பியாயினி மறுநாள் ஆவலோடு அவனிடம் கூறினாள்.

40. பகைவர் படையெடுப்பு

துமையின் தோழியாகிய யாப்பியாயினி, உதயணனிடம் அவன் யாழ் நலத்தைப் புகழ்ந்து கூறும்போது பதுமையும் அண்மையில் இருந்தாள். நேற்று நகைச்சுவை ததும்பச் சிரித்தவாறே தன்னிடமே உரையாடிய அவர்களிடம் இன்று பயபக்தி தென்படுவதை உதயணன் கண்டான். முதல் நாள் கொடுத்த அதே யாழை அவன் கரங்களிற் கொடுத்து, “இந்த யாழிலிருக்கும் மறைவான குறைவை நீக்கிச் செவ்வழிப் பண்ணைப் பாடியருள்க” என்று யாப்பியாயினி,

வெ.மு- 14