பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வயந்தகன் வந்தான்

29

பருவத்தினர். இதன் முடிவு என்ன ஆகும்?' இப்படியும் ஒரு சிலர் பேசிக் கொண்டனர்.

இஃது இவ்வாறிருக்க, உதயணன் தத்தையின் மேலெழுந்த வேட்கையை அடக்க முடியாது தவித்தான். அஃது அவன் உடல் நலத்தையே ஓரளவு பாதித்திருந்தது. இருந்தபோதிலும் தத்தைக்கு யாழும் அரசகுமாரர்க்கு வில் முதலிய கலைகளும் கற்பிப்பதை நிறுத்தவில்லை. உதயணனது உடல்நலிவோ நாளுக்கு நாள் காண்போர் சந்தேகமுறும் அளவுக்கு நிலைமுற்றிவிட்டது. இந்நிலையில் ஏற்ற உதவியாக வயந்தகன் வந்தான். அவனைக் கண்டவுடன் உதயணனுக்கும் ஆறுதல் உண்டாயிற்று.

5. வயந்தகன் வந்தான்

யூகியோடு உஞ்சை நகர் வந்திருந்த வயந்தகன் மாறு வேடத்துடனே பிரச்சோதனனுடைய புதல்வர்களாகிய பாலகுமரன் முதலியோருக்கு உற்ற நண்பனாகி அரண்மனையில் வசித்து வந்தான். அங்ஙனம் வசித்து வருங் காலையில் ஒருநாள் பாலகுமரனுக்காக உதயணனிடம் வயந்தகன் சென்று வரவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதைத்தானே வயந்தகனும் ஆவலாக எதிர்பார்த்திருந்தான். பாலகுமரன், உதயணனுடைய மாணவனல்லவா? அதனால் மலர் மாலைகள், சந்தனப்பேழைகள், தங்கநிறக் கலிங்கங்கள் (பட்டாடைகள்) முதலிய பொருள்களைக் கொண்ட காணிக்கையுடன் வயந்தகனை அவன் உதயணனிடம் அனுப்பி வைத்தான். வயந்தகன், பாலகுமரனது காணிக்கையோடு குஞ்சரச்சேரியிலுள்ள உதயணனின் மாளிகை சென்றடைந்தான். உதயணனைக் காணத் தன்னை இளவரசன் அனுப்பியுள்ளமையை அங்குள்ள காவலன் மூலமாக அவனுக்குக் கூறியனுப்பினான். பாலகுமரனின் காணிக்கையோடு காண வந்திருக்கும் மாறுவேடத்திலுள்ள வயந்தகனை உள்ளிருந்து வெளியே வந்த உதயணன் நன்றாகக் கூர்ந்து நோக்கினான்.