பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மதுகாம்பீர வனம்

325

பஞ்சணைமேல் சிறு குழந்தையைப்போல அழுது புரண்டு கொண்டிருந்தான் உதயணன். இந்த நிலையைக் கண்டு வயந்தகன் மேலும் பேச்சை வளர்க்காமல் அங்கிருந்து சென்றுவிட்டான். உதயணனும் அதே நிலையில் இரவு உணவுகூட உட்கொள்ளாமல் உறங்கிவிட்டான். விடியற் காலை நேரத்தில் ஒரு கனவு கண்டு விழித்துக் கொண்ட போதுதான் அவன் மறுபடி தன் நினைவைப் பெற்றான். பாற்கடலிலிருந்து, வெண்ணிறத்து இளங்காளை ஒன்று உள்ளே விற்றிருக்கிற வெண்டாமரை மலர் ஒன்றை, அம்மலர் பற்றிய உண்மையைத் தன்வசம் கூறிய பின்னர், தெய்வ மகள் ஒருத்தி வந்து தனக்கே அளிப்பதுபோலக் கனவு கண்டான் உதயணன்.

கனவின் முடிவில் அவன் விழித்துக் கொண்டான். அந்நேரம் விடிவதற்கு உரிய நேரம் என்பதைக் கண்டு, கனவின் பயனை அறியும் ஆவல் ஏற்பட்டது அவனுக்கு. விடிந்ததும் புறநகரில் உள்ள தவப்பள்ளிக்குச் சென்று அங்கிருந்த முனிவர் ஒருவரிடம் தன் கனவைக் கூறி அதன் பயனையும் உடனே தனக்கு உரைக்குமாறு வேண்டிக் கொண்டன். முனிவர் அவன் விருப்பப்படியே கனவின் பயனை உரைத்தார். அவர் கூறிய பயனைக் கேட்டு மகிழ்ச்சியும் வியப்பும் ஒருங்கே தோன்றியது உதயணனுக்கு, “உதயண! நீங்கள் யாவரும் இறந்து போய்விட்டதாகக் கருதியிருக்கும் வாசவதத்தை, உண்மையில் இன்றுவரை உயிரோடு இருக்கிறாள். அவள் இறந்துவிட்டாள் என்ற தவறான எண்ணம் உனக்கு இருக்குமானால் அதை இப்போதே மாற்றிக்கொள். இன்று அல்லது நாளை மாலைப் பொழுதுக்குள், வாசவதத்தையை எப்படியும் நீ அடைந்தே திருவாய். அது மட்டுமல்ல. விரைவில் அவளிடத்தில் உனக்கு ஒரு புதல்வன் பிறப்பான். அப்புதல்வன் தேவருலகையும் ஆளும் வாய்ப்புடையவன். வெண்தாமரைப்பூ வாசவதத்தையையும், அதில் வீற்றிருக்கும் இளங்காளை உனக்குப் புதல்வன் பிறக்கப் போவதையும், பூவைத் தெய்வமகள் உன் கையில் அளித்தது, தத்தையை விரைவில் நீ அடையப்