பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 115

மனத் துயரத்தால் அல்லல்படுபவர்களுக்கு ஆறுதல் கிடைப்பதில்லை;

இதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்

காலையில் முன்னதாகவே உறக்கத்திலிருந்து விழித்து எழுபவனே செங்கதிர் தோற்றத்தைக் காண்கிறான்.

ஊக்கத்துடன் காத்திருந்து விளக்கை எடுத்துச் செல்ப வனே இருளில் வழியைக் காண்கிறான்.

குற்றமற்ற நெஞ்சத்துடன் இருந்து, பாடுபட்டு உழைப்பவனே நட்பமைதியின் பொன்முடி சூடப்படு கிறான்.

ஐந்தாவது முற்றுணர்வு

மாற்றங்களின் இடைவெளி

துயர்படும் சிறார்களுக்குப் புனித ஆவியின் வாய் மொழிகள்:

விழித்தெழுங்கள்! உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள்!

நோக்காடு மிக்க உறக்கத்தில் எதற்காக மூழ்கியிருக் கிறீர்கள்?

ஆறுதல் அற்ற இரவிலிருந்து வெளியே வாருங்கள், தீவினையும் பெரும் துயரும்மிக்க இருள்படர்ந்த தீய கனவுகளிலிருந்து வெளியே வாருங்கள்!

ஏனெனில் இருள்படர்ந்த இடத்திலிருந்து வெளியேறு வதற்கு ஒரு வழி இருக்கிறது,

இருள் குடி கொண்டிருக்கும் வீட்டைவிட்டு வெளிவருவ தற்கு உறுதியான வழி ஒன்று உள்ளது.