பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 125

உனது செயல்களை வெட்டிக் குறைப்பதனால் நீ தூய்மையாக முடியாது.

ஆனால், அவ்வாறான செயல்களுக்கு மூல காரணங் கனாக இருப்பவற்றையும், உனது மனத்தையும் நெஞ்சத் தையும் துப்பரவாக்குவதன் மூலமே நீ தூய்மையானவன் ஆகிறாய்.

ஏனெனில், தூய்மையான மனம், தூய்மையற்ற செயல் களைப் புரியாது.

அதேபோல், கறையில்லாத நெஞ்சம் அன்பில்லாத வற்றை நாடுவது இல்லை.

அப்படியானால், அழுக்கடைதல் என்பதும் அதனைத் தூய்மையாக்குவது என்பதும் என்ன?

தூய்மையில்லாத சிந்தனை,

மாசுள்ள ஆசை,

தன்னல்ச் சார்பு,

இவை உள்ளத்தைக் கெடுத்து, இருளையும் இறைப்பை யும் கொண்டு வருபவை.

துாய்மையான சிந்தனை,

புனிதமான ஆசை,

தன்னலம் அற்ற அன்பு,

இவை உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, வெளிச்சத்தை யும் நல்வாழ்வையும் கொடுக்கின்றன.

அப்படியானால், வாருங்கள்! தூய்மைக்கான அந்த குறுகிய வழி எவ்வளவு நேராகவுள்ளது என்பதை வந்து. பாருங்கள்!

வாருங்கள், உண்மை வீற்றிருக்கும் அழகிய அரண் மனை, மறைபுதிர் ஏதுமின்றி எப்படி வெளிப்படையாகவே, திறந்து காணப்படுகிறது என்பதை வந்து அறியுங்கள்!