பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 183

ஆனால் அன்பை எப்படிக் காணமுடிகிறது? உள்ளத்தில் அது எவ்வாறு வெளிப்படுகிறது? எவ்வாறு நடைமுறைப்படுத்துவதும் ஆழ்ந்துஅறிவதும்? பங்காளியாக' இல்லாமல் விடுவது, வெறுப்பை நடைமுறைப்படுத்தாதிருப்பது, சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதிருப்பது, வஞ்சனை, ஏமாற்றைக் கடைப்பிடிக்காதிருப்பது, பேராசைப்படாதிருப்பது, பழிவாங்காது இருப்பது, நிந்திக்கவோ தண்டிக்கவோ விரும்பாதிருப்பது, இவ்வாறு செய்வதெல்லாம் அன்பைப் பெறவே. வெறுப்பை அகற்று, ஆகுலத்திலிருந்தும் தற்பெருமையிலிருந்தும் மனத்தை விடுவிப்பது, ५

ஐயத்தையும் அச்சத்தையும் கலைத்து ஒழிப்பது, ஆசையின் கறைகளை அகத்திலிருந்து கழுவுதற்கே. தூய்மையைக் கெடுக்கும் ஒவ்வொரு கெடுதலில் இவற்றையெல்லாம் செயல்படுத்துவது அன்பை அறிந்து கொள்வதற்கே.

எப்போதும் ப்ொறுமையுடன் இருப்பது, அமைதியை உயர்வாகக் கடைப்பிடிப்பது, புனிதத் தன்மையை இழக்காமல் இருப்பது, மிகக்கூடிய அளவுக்கு பிழை பொறுப்பது, நண்பர்களைப்போல் பகைவர்களையும் சமமாகக் கருதுவது- -

இவற்றையெல்லாம் கைக்கொள்வது அன்பைப் பற்றி ஆழ்ந்து அறிவதற்கே.