பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 வெற்றி மேல் வெற்றி பெற...

பல உண்மைகள் இருந்தாலும் ஒர் உண்மையே அங்கு உள்ளது,

அதுவே தூய்மையான உள்ளம், மிக்க உயர்வான நிறைவான வாழ்வு;

காப்பவர்கள் பலர் இருந்தாலும், அங்கு மீட்பவர் ஒருவர் உள்ளார்.

அவரே மிக்க உயர்வான அறிவொளியூட்டுபவர்கூட,

ஆசிரியர்கள் பலர் இருந்த போதிலும் அங்கு ஒர் ஆசிரியர் இருக்கின்றார்,

அவரே, நேர்மையை மிகுபுகழுடன் வெளிப்படுத்துபவர்.

அங்கே பல தலைவர்கள் இருந்தாலும் அவர் ஒருவரே தலைவர்.

அவரே உண்மையின் மெய்ப்பொருள்; மேலும், உண்மையானவர், காப்பவர், ஆசிரியர், தலைவர் எல்லாமே ஒன்றாக உள்ளவரும் அவரே.

எளிமையான தவறில்லாத வழியே தலைவரிடம் அழைத்துச் செல்கிறது.

உனது தன்னலத்தை வெற்றியடைந்தால், ஆசானின் முகத்தை நன்கு பார்க்க முடியும்.

தன்னலத்தைப் பற்றிக் கொண்டிருந்தால், நீங்கள் அவரைக் காண முடியாது;

தன்லைத்தைத் துறந்து விடுங்கள், ஆம் ஆசான் உங்களுடனேயே வாழ்வார்;

தூய்மையில்லாதவர் தூய்மையானவர்களைக் கான மாட்டார்கள்;

இருள் வெளிச்சத்தை ஊருவிச் செல்லாது; அழிந்துபோகும் தன்மையிலிருந்து அழியாத் தன்மை மறைந்து விடுகிறது.