பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 வெற்றி மேல் வெற்றி பெற...

ஒருவனின் வாழ்வு அன்பினால் முழுமை பெறுகிறது. பண்புதான்் விதை. அறிவு செடி, அன்பு மலர். செடியை விதை அறிவதில்லை. மலரைச் செடி அறிவதில்லை ஆனால் மலர் தன்னையும் அறிகிறது, செடியையும், விதையையும் அறிகிறது.

தன்னல அடி க்கத்தினால் தீய ஆசைகள் கொலையுறு கின்றன;

தன்னைத்தான்ே புகலடைய வைப்பதனால் பொய்த் தோற்றங்கள் கீழே வீழ்கின்றன

தன்னடக்கம், வன்மைக்கு வழி வகுக்கிறது.

தன்னை ஆய்வது அறிவுக்கு வழி காட்டுகிறது.

தன்னை புகலடையச் செய்வது தூய்மை பெற வழி வகுக்கிறது.

தன்னடக்கம், தன்னாய்வு, தற்புகழ்-இவற்றினால் மாந்தன் நிறைவு பெறுகின்றான்.

ஒரு மாந்தன், உயர்வுமிக்க நிலையை அடை கின்றான்.

உண்மையுடன் ஒன்றாகிய பின் மேலும் அல்லைச்சல் இல்லை.

பரிவிரக்கத்தில் மாறுபடாதவன், தேர்மையில் உறுதி பெற்றவன், புனிதத் தன்மையில் இணைபிரியாது இருப்பவன், இவனின் உள்ளம் எல்லோரின் உள்ளங்களுடன் உணர்ச்சியில் ஒன்றுகிறது.