பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரோக்கியத்திற்கு வழி அந்தச் சமயத்தில் ஒரு நண்பர்- அவர் உண்டதோடு நிற்காமல் ஈஸி சேர் ஒன்றில் சஆய்ந்து கண் மயங்கிக் கொண்டிருந்தார் -- அவர் இதைக் கேட்டதும், ஐயா, போதும், மென்று உண்பதால் விளையும் நன்மைகளைப் பற்றிய பிர சங்கம். இதோ, எனக்கு வயது ஐம்பது, இதுவரை மென்று உண்ணல் என்பதே இன்னது என்று அறி யேன். இதுவரை எனக்கு எவ்வித நோயும் உண் டானதில்லே. மென்று உண்ணவேண்டும் என்பது வீண் பேச்சு 1 என்று தடபுடலாய்க் கூறினர். அப்பொழுதுதான் என் மூளை - இதுவரை ஒன்றுமே விளங்காமல் விழித்துக்கொண் டிருந்த என் சிறு மூளை - சிறிது கிறிதாய் வேலை செய்ய ஆரம்பித்தது. இந்த நண்பர் கூறுவதுதான் உண்மை என்று கண்டேன். மென்று உண்பவரில் ஏதோ ஒரு சிலர்க்கு நன்மை உண்டாகலாம். ஆனுல் உலகில் கோடானு கோடி மக்கள் மெல்லா மல் உணவை விழுங்கவே செய்கின்றனர். அவர் களில் எத்தனை பேர் எழுபது எண்பது வயதுவரை வாழ்கின்றனர் மென்று உண்பதே நலம் என் ப.து டாக்டர்கள் கூறும் அதுபவத்திற்கு ஒத்து வராத விஷயங்களில் ஒன்று. வீட்டிற்குத் திரும்பிய பின் இதைப்பற்றிச் சிந்தித்த பொழுது இது போன்ற பல விஷயங்கள் புலனுயின. சாக்கடை நாற்றம் சரீரத்திற்குக் கேடு 95