பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது தோழன் என் பெற்றேர்கள், என் மனைவியுங்கூட என் தோழன் இறந்தவுடன் நானும் போய்விட்டதாகக் கூறிவிடுவர். என்னே இழந்துவிட்டதாக வருந்துவர். கத்துவ ஞானிகள் நாம் இருப்பதும், வாழ்வதும், மடப்பதும் கடவுளிடத்திலேயே என்று வேதாந்தங் கூறுவர். ஆனல் நானே என் தோழனிடத்திலே கான் வாழ்கின்றேன். எனக்கு ஆதாரம் அவனே என்று துணிகரமாய்க் கூறுவேன். தத்துவ ஞானி கள் என் கூற்றை மறுக்கட்டும் ! ஆல்ை அவர்கள் கோஷ்டியைச் சேர்ந்த திருமூலரிடம் முதலில் யோசனை கேட்டுக்கொண்டு மறுக்கும் யோசனையில் இறங்கட்டும். அவனே - என் தோழனே - எனக்கு ஜீவாதா ாம் என்பதால் கான் அவனை எவ்வளவு ஜாக்கிர கையாய்ப் போஷித்துப் பாதுகாத்து வரவேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும் அல்லவா? அஸ்தி வாரத்தில் ஒரு சிறு கல்லைப் பிடுங்கிலுைம் அரண் மனே உடனே விழுந்துவிடும். அதல்ை அவனுடைய கேஷமத்தில் நான் கண்ணுங் கருத்துமா யிருக்க வேண்டும். அதேைலயே ஐரோப்பாவிலுள்ள கிரீஸ் தேசத்தில் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே என் தோழனுக்குப் பெரு மதிப்புத் தந்து வந்தனர். இவ்வளவு அபூர்வமான, இவ்வளவு அத்யா வசியமான தோழனே நான் எப்பொழுது பெற் றேன்? எப்பொழுது நானும் அவனும் தோழமை 31