பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த மூவர் யாயமாய்க் கூறுவதால், தம்பி எதிர்த்துவிடுவானே என்று பயப்படலாம். அன்னியனிடம் தடியிருப்ப கால் அவன் உதவியை நாடலாம். அதற்காக அன் னியனுக்காகச் சாட்சியும் சொல்லலாம். ஆனல் அன்னியன், கிணறு தனனுடையது என்று அகியாயமாகக் கூறிலுைம், கையில் தடி யிருப்பதால் கம்பிக்குப் பயப்படவேண்டிய தில்லை யே. அப்படியிருக்க அண்ணன் உதவி நாடிய தின் காரணம் என்ன ? கையில் கம்பு இருப்பது உண்மைதான். அதைக் கண்டு அண்ணனும் சரி, தம்பியும் சரி, அஞ்சுவதும் உண்மைதான் ; ஆல்ை அண்ணனுக்கு ஞானம் உதய்மாய்விட்டால், சகோ தரத்வம் புத்துயிர் பெற்றுவிட்டால், அண்ணன் தம்பியோடு சேர்ந்துவிடுவானே ! அப்பொழுது தடி யால் என்ன பிரயோஜனம் ? நான் இப்படி யோசித்துக் கொண்டிருந்தேன்' ஆனல் தம்பிக்குத் தாகம் தாங்க முடியவில்லை. அண்ணனையும் அன்னியனையும் திரும்பத் திரும்பப் பார்த்தான். அவர்கள் இருவரும், அப்பா, உனக் குத் தாகம் அதிகம். அதை நாங்கள் அறியாமல் இல்லை. தாகம் அளவு கடந்துவிட்டால் சாகவும் நேரிடலாம். அதுவும் எங்களுக்குத் தெரியும். ஆல்ை, உன்னைச் சாகவிட எங்கட்குப் பிரியமில்லை. அப்பா, உன்னைச் சாகவிடுவதால் எங்கட்கு லாபமுமில்லை, 41