பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்குவது எங்கே ' கள் எழுதப்பட்டிருந்த கடிதத்தை அந்த ஆலயத் தின் வாயிலில் ஒட்டி வைத்தார். கோயிலுக்கு வரும் ஜனங்கள் எல்லோரும் அதை வாசித்தனர். உடனே இவ்விஷயம் நாடெங்கும் பரவியது. இதுவரை செய்த பாவங்கட்கு மன்னிப்புப் பெறுவதற்கு, அவைகளின் பொருட்டுப் பச்சாத் தாபப்பட்டு இனிமேல் அவைகளைச் செய்யாதிருக்க முயல்வது ஒன்றே வழி. வேறு மார்க்கம் கிடை யாது. பாவங்களே மன்னிக்கப் போப்புக்கு அதி காரம் கிடையாது. பாவ மன்னிப்பைப் பணத்தால் பெற முடியாது. பச்சாத்தாபச் செயலால் மட்டுமே பெற இயலும். இதுதான் லூதருடைய வாதங்களின் சாரம். இவ்விஷயம் போப்புக்கு எட்டியவுடன் அவர் தமது மந்திரிகளில் ஒருவரை லூதரிடம் அனுப்பி அவரைத் தம் வசப்படுத்த விரும்பினர். மந்திரி வந்தார், எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனல் அதர் மயங்கவில்லை. அதன்மேல் மந்திரி, ! உனக்கு அரசர் உதவி செய்வர் என்று எண்ணுகிருயோ? போப்பினுடைய சிறு விரலின் ஆற்றலுக்கும் ஆற்றமாட்டார்களே ! நீ யாரைத் தஞ்சமடைவாய்? நீ எங்கே தங்குவாய்? என்று சினந்து கேட்டார். எப்பொழுதும் போல் இறைவன் திருவடி நிழலிலே என்று அாதர் மறுமொழி கூறினர். 57