பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. நான் பாரதியாரைத் தரிசித்தது 1918-ஆம் வருஷ இறுதியிலும் 1919-ம் வருஷ ஆரம் பத்திலும் நான் திருநெல்வேலியில் வக்கீல் தொழில் செய்துவந்தேன். அப்பொழுது நான் அவகாசம் கிடைக்கும் பொழுதெல்லாம், ஜில்லாக் கோர்ட்டுக்குச் சென்று அங்கு நடைபெறும் முக்கிய மான வழக்குகளைக் கவனிப்பது வழக்கம். என்னைப் போலவே பல ஜூனியர் வக்கீல்கள் அங்கு வந்திருப்பர். அப்படி நாங்கள் உட்கார்த்திருக்த பொழுது, ஒரு நாள், திடீரென்று ஒருவர் வந்து எங்க ளிடையில் காலியாயிருந்த ஒரு நாற்காலியில் அமர் வதைக் கண்டோம். அவர் எங்களுடன் பேசவில்லை; எங்கள் பக் கம் திரும்பவுமில்லை. அவர் ஜட்ஜ் ஒருவரையே பார்த்தார். ஆனால், பார்த்தார் என்று கூறுவது தவறு. அவர் சாதாரண மனிதராய்க் காணப்பட வில்லை. அவர் கண்களினின்று வேல் துள்ளி வரு வது போல் இருந்தது. அவர் பார்வை பிறர் கெஞ் சில் புகுந்து ஊடுருவிப் பாய்வது போல் காணப் பட்டது. ஜட்ஜ் அவரைப் பார்த்துவிட்டுத் தலை குனிந்துகொண்டார். நாங்கள் அனைவரும், அவர் 58