பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கான் பாரதியானைத் தரிசித்தது யார் என்று அறியாமல், எங்களுக்குள் வினவிக் கொண்டிருந்தோம். ஆல்ை அவர் அங்கு அதிக நேரம் அமர்க் திருக்கவில்லை. ஐந்தாறு நிமிஷங்கள் மட்டும் அங்கு இருந்துவிட்டுப் போய்விட்டார். எங்கள் மயக்கத் தில் நாங்களும் வெளியேறி அவரைப் பின்தொட ாாது இருந்துவிட்டோம். அந்த அபூர்வ மனிதருக்கு அப்பொழுது வயது சுமார் நாற்பதிருக்கும். இடையில் மூலக்கச்சம் , உடம்பில் கறுப்புக் கோட்டு, தலையில் கிரிக் கட்டு, நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை ! அன்று கண்ட காட்சியை ஒரு நாளும் மறக்க முடி யாது. ஒரு சமயம் உடை முதலியவற்றை மறந்தா லும், அவர் ஒளிநிறைந்த வீர விழிகளை ஒருகாலும் மறக்க ஒண்னுமோ? கிறிது நேரம் சென்று திகைப்பு நீங்கி வெளி யில் வந்து விசாரித்தோம். அவர் நம் தமிழ்நாடு அருந்தவம் இயற்றி ஈன்றெடுத்த இன்கவி அரசர் பூ சுப்ரமண்ய பாரதியார் என்று அறிந்தோம். ஆகா! சாம் எதிர்பாராத வண்ணம் அந்தப் புண்ணிய புருஷர் தரிசனம் கிடைத்ததே என்று அடங்கா மகிழ்ச்சியும், ஆல்ை அது உடனே மறைந்துவிட்டதே, மறுபடியும் கிடைக்குமோ என்று அளவிலா ஏக்கமும் ஒருங்கே அடைந்தோம். 59