பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது நோய் எல்லா நாடுகளிலும் உண்டு. ஐச்வரியம் மிகுந்த ஆங்கில நாட்டிலும் தரித்திரர் இல்லாமலில்லை. அங் கும் ஏழைகளின் அழுகுரல் எழும்பவே செய்கிறது. ஆல்ை உலகிலுள்ள தேசங்களிலெல்லாம் இந்தி யாவே பரம தரித்திர நாடு. வறுமை அதிகம் என்று கூறினல் மட்டும் போதாது. அது பொறுக்க முடி யாத அளவுடையது என்றும் கூறவேண்டியதாகும். இந்தியர் எல்லோரையும் போல் செளகரிய மாய் வாழவேண்டாம். உயிர் உடலைவிட்டு நீங்க்ா திருந்தால் போதும். ஆனல் அதற்குக்கூடப் போது மான பணம் அவர்களிடம் இல்லை என்று லில்லி என்னும் மேட்ைடுப் பெரியார் ஒருவர் கூறுவதைக் கவனிக்க. இந்தியர் தரித்திரர். அவர் தரித்திரம் தாங்க முடியாத அளவுடையது என்று பொதுவாகக் கூறிவிட்டால் போதுமோ? அவர் வறுமையை அளந்து கூற முடியுமோ ? ஜூரம் என்று பொது வாகக் கூருமல், சூடு இத்தனை டிகிரி என்று வைத்தியர் கூறுவது போல், வறுமையின் டிகிரியை யும் கூறவேண்டாமோ? கூறலாம். அதற்குப் பல வழிகள் உள. விரிக்கிற் பெருகும் ஆதலால் ஒன்று மட்டும் கூறுவேன். உலகில் பல நாடுகள் உள. ஒவ்வொரு நாட்டிலும் பல கோடி மக்கள் உளர். அவர்கள் அனைவரும் அனுதினமும் பல்வேறு தொழில்கள் செய்து பணம் தேடிக்கொண்டே f == 77