பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105

வசதி வத்தா, விளையாட்டு வரும்னு நினைச்சேன். இப்படி வாலிபத்துக்கு அடிமையா போயிடுவான்னு நான் நினைக்கவே இல்லே. எனக்கு இருந்த மானம் மரியாதை எல்லாம் இந்தப் பயலாலே மண்ணாபோயிடுச்சுங்க... என்னை மன்னிச்சுடுங்க' என்று வடிவேலு குணசேகரிடம் புலம்பினார்.என்ன புலம்பி என்ன செய்ய?

மூன்று பேர்களில் ஒருவன் தன் வரலாற்றை முடித்துக் கொண்டான். உதவ வந்த உபகாரியின் உள்ளமோ பின் வாங்கிப் போகவும் முடியாமல், முன் சென்று பார்க்கவும் முயலாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது.

என்ன நடக்குமோ என்று இன்பநாதன் பயந்தார்.

வருங்காலம் நமக்கு வறுமையாய் போய்விடுமோ என்று வடிவேலு பயந்தார்.

வசதி வந்தால் வலிமை பெருகும். வலிமை பெருகினால் திறமை பெருகும். திறமை பெருகினால் சாதனை பெருகும். சாதனை பெருகினால் நாட்டின் மதிப்பு உயரும் என்று எண்ணிய குணசேகர், வலிமை இப்படி வனவாசம் போய் விட்டதே என்று வாடினார்.

நிலத்தைப் பார்த்து விதைவிதைக்க வேண்டும். நீங்கள் நினைத்த இடத்திலெல்லாம் விதை போட்டு விட்டு, விளைச்சலை எதிர்பார்த்தால் எப்படி என்று குணசேகரின் மனைவி கேட்ட கேள்வி அவரை உணர வைத்துக் கொண்டிருந்தது. உணர்வுகளை உலரவைத்துக் கொண்டிருந்தது.

ஆ-7