பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

பிறகு எடுத்துப் பார்த்துவிட்டு, தூக்கி எறிந்து விட்டுப்போய் விடுகிறோம். அப்படித்தான்.

ஓடிப்போன முத்துச்சாமியை இப்படித்தான் நினைக்க வேண்டும் என்றார் இன்பநாதன்.

நரைத்துப்போன முடிக்கு கறுப்புமையை அடித்துவிட்டு; சில நாட்களில் இரண்டுங்கெட்டான் நிறத்தில் மாற; அதை வைத்துக் கொண்டு மனம் கலங்குகிற ஆசைக்கார மனிதர்களின் அவல நிலையில் வடிவேலு வீற்றிருந்தார்.

உண்மையாக சேர்த்தப்பணம், உண்மையாக உதவி வேண்டும் என்கிற தனது கணவனின் மனம், இப்படி கேவலப்பட்டவர்களால் வீணாக்கப்படுகிறதே என்ற கவலை குணசேகரின் மனைவிக்கு.

முள்ளு முனையிலே மூனுகுளம் வெட்டினேன். ரெண்டு குளம் பாழ்! ஒன்னுலே தண்ணியேயில்லே என்கிற பழம் பாடல் போல, தனது தத்தெடுக்கப்பட்ட மூன்று இளைஞர்களும் இப்படித்தான் தன்னை மோசம் செய்து விடுவார்களோ என்கிற கவலை நிலையிலே, குழப்பச் சூழ்நிலையிலே குணசேகர் வீற்றிருந்தார். நாட்களை ஓட்டினார்.

ஓடிப்போன வீரன் முத்துச்சாமியின் பயிற்சியாளர் சுந்தரம் சோகமே உருவெடுத்தாற் போல ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். பெண்டாட்டியைப் பறிகொடுத்தவர் போல, கன்னத்தில் கைகளை ஊன்றியபடி. வடிவேலு அவர் எதிரே அமர்ந்திருந்தார். அவரது வலது கைப்புறத்திலே வேணு அமர்ந்திருந்தான். எதிர்புறத்திலே அவனது பயிற்சியாளர் பார்லண்டோ இருந்தார்.

அவர்கள் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்த இடம் விளையாட்டு மைதானம் அல்ல. நவ நாகரிகமான ஓட்டல் ஒன்றில்.எதிரே மதுப்புட்டி ஒன்று; நான்கு டம்ளர்கள்