பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10



ஆனால் அது எந்த விதத்தில் இப்படி திசைமாறி வந்திருக்கிறது என்பதை அறிந்து அவர் திகைத்துப் போடு விட்டார்.

அவனேப் புரிந்து கொண்டவுடன், அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை, குடிப்பது தவறு, அதுவும் ஒரு முன்னேறிவரும் விளையாட்டு வீரன் மது அருந்துவது மகா பாவம் என்றெல்லாம் அறிவுரை கூறினார்.

கண்டிப்புடன் பேசினார். கட்டளையிட்டார் இனிமேல் உனககுப் பயிற்சியாளனாக இருக்க மாட்டேன் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார். அது செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போனது,

ஒருநாள் மாலை பயிற்சி நடந்து கொண்டிருக்கும் பொழுது. வேணுவால் இரும்புக் குண்டை எதிர்பார்த்தத் தூரத்திற்கு எறிய இயலவில்லை. சாதாரணமாகத் தூக்கி எறியும் தூரம் தான், அது கூட அவனால் முடியவில்லை என்ற பொழுது, மார்லண்டோவிற்குக் கோபம் வந்துவிட்டது.

உன்னுடைய பலம் குறைந்து போகிறது. உனது பலவீனம் உன்னே மறைத்துக் கொண்டிருக்கிறது. இதை தான் குணசேகரிடம் சொல்லியாக வேண்டும். இனிமேல் இதைதான் பார்த்துக் கொண்டிருந்தாலும். பொறுத்துக் கொண்டிருந்தாலும், நான் துரோகியாகி விடுவேன் என்று கோபத்துடன் கூறி விட்டார் மாtலண்டோ.

இனிமேல் இப்படி நடக்க மாட்டேன். என்னப்பற்றி அவரிடம் சொல்லி, என் வருமானத்தைக் கெடுத்து விடாதீர்கள், அவமானத்தைக் கொடுத்து விடாதீர்கள் என்றான் வேணு.

முடியாது இன்று மாலையே நான் சொல்லத்தான்? போகிறேன் என்றார் பயிற்சியாளர்.