பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147



”ஆகா" என்பது போல தலையாட்டினர் குணசேகர்.

நேசலிங்கத்திற்கு ஏதோ கனவுலகில் சஞ்சரிப்பதுபோல இருந்தது சொல்லாமல் ஒடிப்போன சூதுக்காரன் என்று: தூற்றி ஒதுக்கிவிடுவார்களோ என்று அஞ்சி வந்த அவனுக்கு, சொர்க்கத்தில் இடம் கிடைத்தது போல மகிழ்ந்து போனான்,

வந்து போகக்கூட யோக்கிதை இல்லாத தன்னையும் ஒரு பொருளாக மதித்து, வீட்டிலே ஒருவராக ஏற்றுக் கொள்ளும் அவர்களே மனிதர்களாக அவன் நினைக்கவில்லை. கண் முன்னே நடமாடும் கலிகாலத் தெய்வங்களாகவே நினைத்தான்.

இந்த ஒரு வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும் ! தனக்கு விளையாட்டு வாங்கிக் கொடுத்த வரப் பிரசாதமென வாழ்வை மனமார வாழ்த்திக் கொண்டான்.

அம்மா...

"அம்மா" என்று வணங்கினான் நேசலிங்கம். துயரமே வீடாக இருந்த அந்த இடம். இப்பொழுது தூய அன்புக்கும், லட்சியத்துக்கு உறைவிடமாகவும்; இன்பக் கோயிலாகவும் விளங்கிக் கொண்டிருந்தது.

நாட்கள் பல நகர்ந்தன.

ஒருநாள் வெற்றி காட்டிய இன்ப நாதனும் குணசேகரும் உட்கார்ந்தவாறு மணிக்கணக்காகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"நான் உதவி செய்யத் தான் விரும்பினேன். ஆனால், இப்படித் தோல்வி மேல் தோல்வியாக வந்து என்னை சித்ர வதை செய்யும் என்று நான் நினைக்கவே இல்லை... நான்