பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
27

வழக்காடும் மனம் வேண்டும். என் மனமோ அப்படி அல்ல. சொல்லி விட்டதை இல்லை என்று மறுக்கக் கூடத் தெரியாத என் மனோபாவத்திற்கு அரசியல் ஏற்ற இடம் அல்ல.

குணசேகரை பாவமாகப் பார்த்தார் இன்பநாதன். கரி அடுப்புக்குள் நுழைந்து கரி ஒட்டாமல் வெளியே வருகின்ற சாமர்த்திய சாலிகள் நிறைந்த அரசியல் சாம்ராஜ்யத்தில், குணசேகர் ஒரு காவலன் வேலைக்குக்கூட லாயக்கற்றவர் என்பதையும் புரிந்தவர்தான்.

பத்திரிகை ஒன்று நீங்கள் நடத்தலாமே, உங்கள் மனம் போல, நீங்கள் நினைத்ததை நியாயம் என்பதை எழுதலாமே! இதில் ஏன் நீங்கள் முழு மூச்சாக ஈடுபடக் கூடாது ?

கார் யாருது சார்! நோ பார்க்கிங் ஏரியாவிலே நிறுத்தியிருக்கு, போலீஸ்காரரின் அதட்டல் கேட்டது.

நிறுத்தக் கூடாதுங்கற இடத்துலதான் நிறுத்துவாங்க. போகக் கூடாதுங்கற இடத்துக்குத் தான் போவாங்க. 'இந்தியர்கள் குணமே இப்படித்தான்' என்று ஒரு வழிப் போக்கர் விமர்சனம் செய்து கொண்டே போனார்.

பேசிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு அவசரமாக இருவரும் எழுந்தனர்.