பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வார்ப்புரு:Rh 58//


டிரைவருக்கு என்று ஏறிட்டுப் பார்த்தார். போய்விட்டலாரியையே பார்த்துக்கொண்டிருந்த அவரது கண்களில், பட்டுப் போயிருந்த ஒரு பெயர்ப் பலகை பட்டது.

பாதி உடலைப் பறி கொடுத்திருந்த அந்தப் பலகையில், மைதானம் என்று எழுதப்பட்டிருந்தது. இது ஒரு விளையாட்டு மைதானமாகத் தான் இருக்க முடியும் என்று. கருதி ஒரு நோட்டம்விட்டார்.

ஆமாம் : சுற்றி வளைக்கப்பட்ட மதில் சுவரும் அதற்கு இருந்தது. ஆனல் அவையோ கடுமையான பீரங்கித் தாக்கு தலுக்கு இரையான கட்டபொம்மன் கோட்டை போலக் காட்சியளித்தது. ஆள் ஏறிப் போவதுபோல் அரை அளவு: இடிக்கப்பட்டும், உள்ளே நுழைந்து போவது போலக் குடையப்பட்டும் சுற்றுச் சுவர் இருந்தது,


மூன்று நான்கு பன்றிகள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்று கொண்டிருந்தன. மைதானத்திற்குள்ளே அவைகளுக்கு என்ன வேலை என்ற ஆவலில் குணசேகர் , ள்ளே பார்த்தார்.


உள்ளே பந்து விளையாடுவதற்கென்று சில பகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. மைதானங்கள் சிமிண்டால் உருவாக் கப்பட்டிருந்தன. ஆல்ை அந்த தரைப் பகுதிகள் மீது அவர் கண்ட காட்சி, குணசேகரின் உச்சந் தலையிலே ஆயிரம் குளவிகள் ஆங்காரத்துடன் கொட்டியது போல் இருந்தது. தலையை அழுத் திப் பிடித்துக் கொண்டார். கண்களே இறுக்கி கெட்டியாக மூடிக்கொண்டார். இருந்தாலும் அந்தக்காட்சி மீண்டும் மீண்டும் அவர் கண் முன்னே வந்து பரந்து பாய்ந்து நின்றது.

  • ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செல ைNத் து உருவாக்கி யிருந்த அந்த சிமெண்ட் த ரை ஆங்காங்கே மலக்கு வியலாகக் காட்சியளித்தது, கால் வைக்க ஒர் அடிகூட இடைவெளி