பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்தரம் 133

சத்யா, ஜன்னல் வழியாக, மெய்யப்பனின் அறையை அவ்வப்போது பார்த்துக் கொண்டாள். எங்கேயாவது ஏதாவது விழுவதுபோல் சத்தம் கேட்கும்போது, திடுக்கிட்டு எழுந்து, கேட்டுக்குப் போவதுபோல் போய், அந்த அறையைப் பார்த்துக் கொண்டாள். மெய்யப்பன், படுத்துத்தான் கிடக்கிறான்... கட்டிலில் ஏறவில்லை. கயிற்றைக் கட்டவில்லை.

பூக்களைப் பார்த்த கண்முன்னால், ஒரு முதிய உருவம் நிற்பதைப் பார்த்து நிமிர்ந்தாள். உடனே, அவரது காலைத் தொட்டுக் கும்பிட்டுக் கொண்டே, "எப்போ சாமி வந்திங்க... நான் கவனிக்கல..." என்று அடக்கமாகப் புன்னகைத்துச் சொன்னாள்.

வந்தவருக்கு எழுபது வயதிருக்கலாம். ஆனால், முகத்தில் பழுப்பில்லை. நெற்றியில், பட்டை பட்டையாக இல்லாத ஒரு அங்குல நீள திருநீர். அதில் குங்குமம் இல்லை. குளமிடகாய் போன்ற மூக்கு காவிக்கரை போட்ட வேட்டி அருள் பாலிக்கும் கண்கள். தொலைதூரப் பார்வை. சற்று விரிந்த வயிறு. கழுத்தில், சிறிய அளவிலான ருத்ராட்சமாலை; எதையும் துருவிப் பார்க்காததுபோல், துருவிக் கேட்காதது போலான போக்கு காடாத் துணியிலான சட்டை அதில் அண்டா குண்டாப் பை, நல்லதையும், கெட்டதையும் அந்தப் பைக்குள்ளே வாங்கிப் போட்டுக் கொள்வதுபோன்ற பற்றற்ற நடை வாழ்க்கை என்பது இந்த உலகோடு முடியவில்லை என்பதுபோல், சொல்லும் சொற்களில், வாழ்க்கைக்கு அப்பால் உள்ள ஏதோ ஒன்று ஒலிப்பதுபோன்ற தோரணை. நிதானமான சொல்; வேகமான அர்த்தம்.

சத்யாவிற்கு, அந்தப் பெரியவரைப் பார்க்கும் போதெல்லாம், அஞ்சத்தக்கது, அஞ்சுதற்குரியது எதுவும் இல்லை என்று தோன்றும். அவரைச் சுற்றி, அல்லதை எரித்து, நல்லதைப் பேணும் ஒரு ஜோதிப் பிரகாசம் இருப்பது போலவும், மானுட நெறிப் பயிர்கள் வளர்வதற்கான சீதளம் இல்லாத குளுமை வீசிக் கொண்டிருப்பது போலவும்