உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D மு. கருணாநிதி 18 141 - "நாள், நட்சத்திரம், சாமி, கோயில், ஜெபம், தபம் இப்படியெல்லாம் நம்பி நம்பிக் கடைசியில் கெட்டுப் போனேன். நான் நம்பிய நாளோ--நட்சத்திரமோ- கோயிலோ---தெய்வமோ எதுவுமே என்னையும் என் குடும் பத்தையும் கௌரவமாக வாழவிடவில்லை. என் மகள் எப்படி விபச்சாரியானாள்? எப்படிக் கள்ள அபின் கடத்தும் கைகாரியானாள் ? கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை. தெய்வமும் ஊமையாகிவிட்டது. நான் உயிரோடிருந்தால் இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே மனத்தை அலட்டிக்கொண்டிருப்பேன். இந்தக் கேள்விகளிலிருந்து என் உள்ளத்தையும், தெய்வத்தையும் விடுவிப்பதற்காகப் பிணமாகிவிடுகிறேன். அமைதி பெறுகிறேன். சிவகாமி மஞ்சள், குங்குமம் இழந்து விடுவாள். அவளுக்குக் கட்டிய மாங்கல்யத்தை நானே பலாத்காரமாக அறுத்துவிடுகிற குற்றச்சாட்டுக்கு ஆளாகிறேன். பரவாயில்லை..... என் கொதிப்பு அடங்க இதைத் தவிர வேறு வழியில்லை. பைத்தியக்காரன் ஏதோ கிறுக்கி வைத்திருக்கிறான் என்று நினைக்காதீர்கள் ! பைத்தியம் தெளிந்துவிட்டது எனக்கு. அதன்பிறகே இந்த நல்ல முடிவைத் தேர்ந்தெடுத்தேன். சிந்தாமணி, மாசற்றவள் என்று எப்போதாவது உண்மை யிலேயே நிரூபிக்கப்பட்டால், அவள் அழகான கரங்களால் என் சமாதிக்கு மலர் தூவட்டும். இது ஒரு வெறுங் கனவு என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவளாவது அப்பழுக்கற்றவள் என்று நிரூபிக்கப்பட வாவது! பாவி, பாதகி, என் குடும்பத்தைக் கெடுத்த குடிகேடி! அவளுக்கு என் மரணச் செய்தியைக்கூடச் சொல்லாதீர்கள் !... அவள் நல்லவள் என்று தீர்மானமாகத் தெரிந்தால் வேண்டுமானால் சொல்லுங்கள் !... சீ ! என்ன குழப்பம் எனக்கு; அமைதி காணப்போகிற நேரத்திலே!" பிணமாக மிதந்துகொண்டிருந்த சிவநேசரின் இடுப் பிலே நனைந்துபோன கடிதத்தில் மேற்கண்ட வாசகங்கள்