உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 வெள்ளிக்கிழமை கண்ணீர், இப்போது வெள்ளமாக கன்னங்களைக் கழுவியது. வெளிப்பட்டுக் ஆனந்தியிடமிருந்த எந்தெந்த குணநலன்கள் தன்னை வசீகரித்ததோ அதே குணநலன்களுக்குத்தான் தன் நண் பனும் அடிமைப்பட்டுவிட்டான் என்று முடிவு செய்தான். தனக்கு ஏற்பட்ட காதல் அவனுக்கும் ஏற்பட்டதை யார் தடுக்கமுடியும்? அவனும் தன்னைப்போல உள்ளங் கொண்டவன் தானே! அய்யோ! அவன் ஆசைக்குத் தடையாக ஆனந்திக்கும் அவனுக்கும் குறுக்கே தான் வந்து நின்றுவிட்டோமே என்று நொந்துகொண்டான். அவனது காதல் உள்ளத்திலே கடுமையான தியாகம் உதயமாயிற்று. ஆனந்தியின் மீதுள்ள அன்பையே தியாகம் செய்யத் துணிந்துவிட்டான் நயினா முகம்மது. அவளையும் அழகப்களையும் ஒன்றுசேர்த்துவிடுவது என்று உறுதிகொண்டான். பள்ளிப் பருவத்திலே நயினாவும் அழகுவும் சேர்ந்தே திரிவார்கள். அப்போதெல்லாம் ஒரே பண்டத்தின் மீது நயினாவும் அழகும் பிரியம் வைப்பார்கள். அந்தப் பொருள் ஜோடியாக இருக்காது. அதனால் அழகப்பன் தான் விரும்பிய பண்டத்தை நயினாவிடம் காடுத்து அவனைத் திருப்தி அடையச் செய்வான். அழகப் பனால் அது முடிந்தது; காரணம் அது ஒரு பண்டம்! - நயினா இழப்பது வாழ்க்கையையே அல்லவா ? இது மிகப்பெரும் தியாகம் அல்லவா? எதுவாயினும் சரி; காதலைத் தியாகம் செய்தே தீருகிறேன் - அழகப்பன் ஆன னந்தியைத் தம்பதிகளாக்குகிறேன் என்று உறுதி செய்துகொண்டு மாடிப் பக்கம் போக எழுந்தான் நாற் காலியை வீட்டு ! எழுந்தவன் கீழே விழுந்துவிட்டான். 99 அடிபட்ட இடங்களில் அவ்வளவு வலி அவனுக்கு! மெதுவாக எழுந்து, நகர்ந்து நகர்ந்து மாடிப்படிகளைக் கடக்க ஆரம்பித்தான். அழகப்பன் இருந்த அறைக்குள் நுழைந்தான். அவனைக் கண்டதும் அழகப்பனுக்கும்