உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு.கருணாநிதி 19 அடுத்த படித்துறையிலே நின்றவாறு அவர்களையே கண்களால் விழுங்கிக்கொண்டிருந்தான் அந்த மனிதன். டைகர் என்று அவர்கள் அழைத்ததற்கு ஏற்ப தோற்ற முடையவன் தான் அவன். அவனது முகத்திலே மிருக சுபாவத்தின் சாயல் செதுக்கப்பட்டிருந்தது. அவனது பெரிய விழிகளிலே பயங்கரம் பளிச்சிட்டது. அவன் பல் துலக்கும் அந்தத் தோரணை மூலமாகவே உள்ளத்தில் கொழுந்துவிட்டு உடலைத் தகித்துக்கொண்டிருக்கும் காமத் தீக்கு ஆளாகித் தவிக்கிறான் என்ற நிலை புரிந்தது. சிந்தாமணியும் தோழிகளும் அவசர அவசரமாக குளத்தை விட்டுக் கரையேற முயன்றனர். அவர்கள் பக்கம் திரும்பி நின்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் விலங்குப் பார்வை வீசிக்கொண்டிருந்த அவன் தோளிலே இன்னொருவன் கைவைத்து - "என்ன டைகர்! உலகத்தையே மறந்து விட்டாய் போலிருக்கே ?" என்று கூச்சலிட்டான். திடுக் கிட்ட டைகர் அடேடே! டே டே ! வேம்புவா? வாப்பா-வா ! பார்த்தாயா? ... தேவலோகமே இந்தத் திருக்குளத்தில் இறக்குமதியானதுபோல் இருக்கிறது!” என்றான் அந்தப் பெண்களின் காதில் விழும்படியாக! PMO 61 'ஓகோ - அதுதான் தேவேந்திரன் இந்தப் பக்கம் விஜயமோ?" என்றான் வேம்பு. .. டேய் வேம்பு - தெரியுமா சேதி ?...... சிந்தாமணிக்கு கல்யாணம் நிச்சயமாயிட்டுது! 66 அடே--அப்படியா? எப்ப?” "இன்னம் தேதி குறிக்கிலே... இன்னைக்கு பெண்வீடு பார்க்க வர்ராங்க!” அப்ப..உன் கதை என்ன ஆச்சு?” று கடைசியாகப் பெண் "என் கதை இனிமேல்தான் தொடரப்போகிறது. நேற்று சிவநேசனிடம் சென்று கேட்டேன். எனக்கும் அந்தக் கிழட்டுப் பயலுக்குமுள்ள பழைய சொந்தபந்தம் எல்லாம் சொல்லி, எனக்குத்தான் சிந்தாமணி உரியவள் என்று கூறினேன், வாதாடினேன் வக்கீலைப்போல!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/20&oldid=1708046" இலிருந்து மீள்விக்கப்பட்டது