உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 40 வெள்ளிக்கிழமை கொண்டு அழுதாள். முரடர்கள் பின்னங்கால் பிடரியில் இடிபட ஓட ஆரம்பித்தார்கள். அழகப்பன் ரிவால்வாரைக் கீழே போட்டுவிட்டு நயினா முகமதின் மீது சாய்ந்தான். தன் ஆருயிர்த் தோழனைத் தானே கொன்றுவிட்டோம் என்ற அதிர்ச்சி சாமான்ய மானதா? அந்த வேகத்தில் நண்பன் மீது அவன் விழுந்தான். 66 ழு அடேடே! வலிக்குதப்பா! மாடுமாதிரி மேலே விழு கிறாயே!" என்று சிரித்துக்கொண்டே திடீர் என எழுந் தான் நயினா முகம்மது! அழகு வியப்போடு நயினா! நீ சாகவில்லை?" என்று கேட்டான். 66 'குறிபார்ப்பதில் உனக்கு யாருமே ஈடில்லை அழகப்பா! நல்லவேளை நீ பார்த்த குறிக்கு இது உண்மையான ரிவால் நீ வாராக இல்லாமல் விளையாட்டுத் துப்பாக்கியாகப் போய் விட்டது!" "உம்-உம்! புறப்படு!" என்று அனைவரையும் காரிலே உட்காரச்சொல்லி அவசரப்படுத்தினான். புது வாழ்வு பெற்றதுபோன்ற பூரிப்பில் எல்லோரும் கார் பயணத்தை மீண்டும் தொடங்கினர்! சிந்தாமணியை மருத்துவ மனையிலே விட்டுவிட்டு வீடுவந்த சிவநேசர், சிவகாமி இருவரும் மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்கக் காத்திருந்தனர். குறிப்பிட்ட நேரத் திற்குச் சிறிது தாமதமாக ஆனாலும் ஜோசியர் சொன்ன நாழிகையில் சிறிதும் தவறாமல் மாப்பிள்ளை கார் சிந்தா மணியின் வீட்டு வாசலில் வந்து நின்றது! சிவநேசரும் சிவகாமியும் அவர்களை எதிர்கொண்டழைத்து சரித்தனர். உப "மாப்பிள்ளை வரமாட்டார் என்றல்லவா நினைத்தேன்" என்றார் சிவநேசர். .. அவருக்கு வர இஷ்டமில்லைதான். நான்தான் கட்டா யப்படுத்தி இழுத்துவந்தேன் என்று தன்னைத்தானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/41&oldid=1708067" இலிருந்து மீள்விக்கப்பட்டது