உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு.கருணாநிதி நயினா அறிமுகப்படுத்திக்கொண்டு கூறினான். 41 நயினா முகம்மது பதில் "மாப்பிள்ளை இப்போது வீட்டுக்கு வர பொருத்தம் சரிஇல்லை! அடுத்த மாதந்தான் வரலாமென்று பஞ்சாங்கத் தில் போட்டிருக்கிறது! அதனால்தான் அவர் வரவேண் டாம்... அப்படின்னு...... நினைச்சேன் !” என்று இழுத்தார் சிவநேசர். அவரது சனாதன உள்ளம் சடங்குகள், சாஸ் திரங்களுக்கு அடிமைப்பட்ட உள்ளம் கிரக பலனுக்கு விரோதமாக மாப்பிள்ளை வருகைதந்ததை ஏற்க மறுத்து விட்டது. அதை வெளியில் காட்டாமலும் அவரால் இருக்க முடியவில்லை. " கிரகம் சரியில்லாவிட்டாலும், ஏதோ தோஷம் கழிச்சா சரியாப்போயிடும்னு சொன்னார் ஜோசியர்! அதனால்தான் பையனை அழைச்சுகிட்டு வந்தோம்!" "தோஷம் கழிப்பதாவது ஒண்ணாவது; அதெல்லாம் பித்தலாட்டம்! ஜோசியன் பிழைப்புக்காகப் புளுகுவது! "கிரகபலன் போட்டிருக்கிற அதே பஞ்சாங்கத்திலே தான் தோஷ நிவர்த்தியும் போட்டிருக்கிறதாக ஜோசியர் சொன்னாரே!" என்றான் நயினா! "அட உமக்கென்னய்யா தெரியும்? நீர் வேறே மதம், நாங்க வேறே மதம்!" என்று கடுமையாகப் பேசி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சிவநேசர். அழகப்பனின் முகத்தை நயினா கிண்டலாகப் பார்த்துச் சிரித்தான். அழகு முகத்திலே அசடுவழிந்தது. நயினாவுக்கு இந்தமாதிரிதாக் குதல் எல்லாம் சாதாரணம்! பிறகு தாயாரம்மாள் வழியில் திருடர்களிடமிருந்து தப்பிய கதையைக் கூறினாள். "எல்லாம் கிரகபலனை மீறியதால் வந்த வினை தான்!" என்று சிவதேசர் இடித்துக் காட்டினார். று இன்னும் ஒருதடவை இப்படி ஏதாவது சொல்லியிருப் யாரேயானால் அழகப்பன், தாயாரை அழைத்துக்கொண்டு பெங்களூர் திரும்பியிருப்பான்; அவ்வளவு ஆத்திரம் ஏற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/42&oldid=1708068" இலிருந்து மீள்விக்கப்பட்டது