உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 50 வெள்ளிக்கிழமை பிடித்து வெளியே வெளியே அழைத்துக்கொண்டு புறப்பட்டான் அழகு நயினாவுக்கும் எந்த முடிவும் தோன்றவில்லை. அவனும் பின்தொடர்ந்தான். 66 என் குடும்பத்தை அடியோடு கெடுத்துவிட்டுப் போகும் கொலைகாரர்களே! நீங்கள் உருப்படுவீர்களா? மண்ணாய்ப் போங்கள்!' என்று ஆவேசமாகக் கத்தி 'சாப' மிட்டார் சிவநேசர்! என்று "என் பெண் கெட்டவளா? அட தெய்வமே! இவர்கள் நல்லாயிருப்பார்களா?" கோவென அழுதாள் சிவகாமி! கூச்சலுக்கும் மாரடித்துக்கொண்டு அழகப்பன், குழப்பத்துக்குமிடையே தாயாரை காரில் உட்காரவைத்து, தானே காரை வேகமாக ஓட்டுவதற்கு அமர்ந்தான். சிவநேசர் சிவகாமி இருவரும் மாறி மாறிச் சபித்துக்கொண்டேயிருந்தார்கள்! அந்த சாபத்தை பொறுக்கமுடியாத தாயாரம்மாள். அட, ஏன் இப்படித் திட்டுகிறீர்கள் ; நீங்கள் நாசமாய்ப்போக! என் பிள்ளையை ஏமாறவைத்து, எங்கள் மதிப்பையே குலைத்த நீங்கள் புழுத்துத்தான் சாவீர்கள் !" என்று பதிலுக்கு சாபம் கொடுத்தாள். நல்லவேளை இருவரின் சாபங் களுக்கும் சக்தியில்லாமல் போய்விட்டது! அழகப்பன் காரை வேகமாக ஓட்ட ஆரம்பித்தான். கார் புறப்படுவதி லேயே அவன் உள்ளத்தின் வேகம் புலப்பட்டது! வீட்டைவிட்டு விர்' எனப் பறந்த காரின் முன்னே ஒரு பெண் கூச்சலிட்டவாறே ஓடிவந்தாள்!" நிறுத்துங்கள் ! நிறுத்துங்கள்! என்று அவள் சப்தம் போட்டுக்கொண்டே ஓடிவந்தாள். காரை நிறுத்துவதற்குள் அவள் காரின் முன்னே வந்து விழுந்தாள். அவள்மீது காரின் முன் சக்கரம் ஏறியது! ஆ!" என்ற அவளது கூச்சல் மட்டுமே கேட்டது! கார் நின்றது - அழகப்பன், நயினா, டிரைவர் முதலியோர் இறங்கி ஓடிவந்தனர். அந்தப்பெண் இரத்த வெள்ளத்திலே மிதந்துகொண்டிருந்தாள். 06

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/51&oldid=1708077" இலிருந்து மீள்விக்கப்பட்டது