உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணா நிதி 51 66 6 அவளை உடனடியாகத் தூக்கி மடிமீது சாய்த்துக் காண்டான் அழகப்பன் ! அவள் தலையிலேயிருந்து குபு குபு வென்று இரத்தம் பெருக்கெடுத்தபடி யிருந்தது. ? லேடி டாக்டர் மாதிரியல்லவா இருக்கிறது !" என்று வியப்போடு கூறினான் நயினா முகம்மது! ஆனந்தி யம்மா ! ஆனந்தியம்மா!'-என்று பதை பதைத்த குரல் களோடு ஊரார் அந்த இடத்தில் கூடிவிட்டனர். யாரது று 66 99 ஆனந்தி கண் விழிக்கவில்லை. பிரக்ஞை இல்லாமல் இருந்தாள். தலையிலே யிருந்து வழியும் இரத்தம் நிற்க வில்லை. அழகப்பன் அருகிலிருந்தவர்களைப் பார்த்து, இந்த ஊரில் நல்ல ஆஸ்பத்திரி வேறு எங்கு இருக் கிறது?" என் என்று ஆவலோடு கேட்டான். “இங்கு ஏது ஆஸ்பத்திரி? ஒரே ஒரு ஆஸ்பத்திரிதான் - அவுங்களுக்கே தான் இப்படி வந்துவிட்டதே!" என்று அங்கலாய்த்தனர் சுற்றி யிருந்தோர்! பக்கத்திலே ஐந்தாறு மைல் போனால் பாலையூர் இருக்கிறது. ஒரு சின்ன டௌன் மாதிரி! அங்கு இருக்கு நல்ல ஆஸ்பத்திரி!" என்று ஒருவன் பாதை காட்டினான். ஆனந்தியைக் காரிலே தூக்கிவைத் துக்கொண்டு அழகப்பன் முதலியோர் புறப்பட்டனர். தாயாரம்மாளின் மடியிலே ஆனந்தி சாய்ந்து கிடந்தாள். நயினா முகம்மது ஒரு துணியினால் ஆனந்தியின் தலையை அழுத்திப் பிடித்து இரத்தப் பெருக்கைக் குறைக்க முயன் றான். துணியையும் மீறி வெளிவந்த இரத்தம் காரின் உட் பகுதியையே சிவப்பாக்கிக் கொண்டிருந்தது. தாயாரம் மாள் மனம் படாதபாடு பட்டது. என்னமோ அப்பா ; இந்த மூதேவி வீட்டிலே சம்பந்தம் பேசியதிலேயிருந்து நமக்குச் சனியன் பிடித்தது!" என்று அங்கலாய்த்துக் கொண்டாள். பாலையூர் மருத்துவ மனையில் ஆனந்திக்கு அவசர அவசரமாகச் சிகிச்சை ஆரம்பமாயிற்று. இரத்தம் அதிகமாக வெளியேறிவிட்டதென்றும் இன்னும் சிறிது தாமதித்திருந்தால் உயிருக்கே ஆபத்து வந்திருக்கலாம். 8 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/52&oldid=1708078" இலிருந்து மீள்விக்கப்பட்டது