உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி 5 கொண்டுபோனான். அதை அவள் மறுத்துவிட்டான். னைவரும் நினைத்தார்கள், அவளுக்கு 'ஹார்க்லிக்ஸ் தேவையில்லையென்று ஆனால் அவளுக்கு இப்போது அந்த டைகரின் உபசாரம் தேவையில்லை! ஏன்; டைகரே தேவை யில்லை! அவளே 'டைகரா'க மாறியிருக்கிறாள் இப்போது ! பாதகன் டைகரைப் பழிவாங்கும் புலிக்குணம் பெற்று விட்டது, அந்தப் புள்ளிமான்! - "ஓய்வாக இருக்கட்டும் - ஒன்றும் பேசாதீர்கள்" எனக் கூறி டாக்டங்கள் அகன்றார்கள். இவர்களும் அங்குள்ள நாற்காலிகளில் அமர்ந்தார்கள். ட அம்மாடி! கண்ணு!” என்று அருகே சென்று செல்லமாகக் கொஞ்சினாள் தாயாரம்மாள். 6, 98 உம் க என் று மாத்திரமே ஆனந்தியால் கேட்க முடிந்தது! "கொஞ்சம் 'ஹார்லிக்ஸ்' சாப்பிடுடா அம்மா! ரொம்ப களைப்பாயிருக்கும்!"-இது தாயாரம்மாள்! ஆனந்தி கண்களைத் திருப்பி தாயாரம்மாளை ஏற இறங்கப் பார்த்தாள். மீண்டும் அவள் கண்கள் கலங் கின. தாயாரம்மாள் ஹார்லிக்ஸை' எடுத்துக் கொடுத் தாள். அதை ஆனந்தி முழுவதுமே குடித்தாள். டைக ருக்கு அங்கு இருப்புக் கொள்ளவில்லை. அழகப்பனுக்கோ எண்ண அலைகள் இதயத்தில் குமுறி எழுந்தன! எவ்வளவு நல்லவள்-யாரோ ஒரு தவறு செய்த பெண்ணைக் காப்பாற்றுவதற்காக அவளுக்கு எவ்வளவு ஆத்திரம் ஏற்பட்டிருக்கிறது! தன் நிலைமறந்து, எதிரே வருவது என்ன என்கிற உணர்ச்சியுமற்று, ஒரு பெண் ணுக்கு வாழ்வளிக்க விரும்பிய இவளது இருதயத்திற்கு ஈடு இணைதான் ஏது! அழகி மட்டுமல்ல ; அன்பின் உரு! ஆகா, இவளது கண்களிலேதான் எத்துணை அபூர்வமான கவர்ச்சி! குஞ்சி அழகும். கொவ்வை இதழ் அழகும். கோமளக் கண் அழகும் அழகல்ல; இவைகள் அனைத்தை யும்விட மேலான என் நெஞ்சத்து அழகே அழகு சொல்லாமற் சொல்வதுபோல அவளது அற்புத விழிகள் 5 ம் என் று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/66&oldid=1708092" இலிருந்து மீள்விக்கப்பட்டது