66 வெள்ளிக்கிழமை அசைந்துகொண்டிருக்கின் றனவே! பிறர் கெடுவதையே விரும்புகிற இந்த வையகம் ஆனந்தி போன்ற ரோஜா மலர்களையும் அரளிப்பூ கூட்டத்தினிடையே தூவியிருக் கிறது என்பதை நான் ஆதார பூர்வமாக உணர முடிகிறது! இந்த நல்ல பெண்மணிகளன்றோ நாட்டையும் வீட்டையும் வாழ்விக்கவந்த உத்தமிகள்! எனக்கு வர இருந்தவள் சிந்தாமணி! அல்ல; அல்ல! புழுதி மண்ணிலே அறுந்து சிந்திவிட்ட மணி! சிதறிவிட்ட மணி! அவளுக்குப் பெயர் தான் சிந்தாமணி ! இவளோ ஆனந்தி! பெயரிலே கொஞ் சம் நவநாகரிக பாணி மினுக்கிடுகிறது! உத்தியோகமும் அப்படித்தான்! ஆனால் உள்ளமோ தங்கம்! தங்கம் என்று கூடச் சொல்ல இயலாது-அந்த உபமானத்திற்கும் இந்த டைகர் புதிய வியாக்கியானம் கொடுத்து விட்டான். இது தணல் படாத தங்கம்! கரம் படாத முல்லை! களங்கம் படராத வெள்ளி நிலவு! இந்த மாதரசி எனக் கு வாழ்க் கைத் துணையானால்?.... 39 கேள்விக்குறியல்ல ; ஆவலைக் காட்டும் அறிகுறி எ எழுந் தது அழகப்பனின் ருதயத்தில்! நினைவு காட்டாறு தானே! எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானா லும் பிரயாணம் செய்யுமல்லவா? அந்தப் பிரயாணத்திற் கும் ஒரு முற்றுப்புள்ளி உண்டே! காட்டாறு காட்டிலேயே பரந்து விரிந்து மறைந்து ஒழிந்துவிடும்! அல்லது கழனிக் கிடையே செல்லும் குட்டி வாய்க்கால்போல சிறுத்துக் கடலிலே கலக்கும் இரண்டாவது நிலையைப்பெற்றது அழ கப்பனின் நினைவு நதி! அவனை ஆனந்தி, நோய்ப் படுக்கையிலிருந்தே கவர்ந்துவிட்டாள். அவளது அன்பு இதயத்தை எப்படி யும் தன் இதயத்தோடு பதித்து விடவேண்டுமென்று தீர் மானம் செய்துகொண்டான். மணமகள் தேடும் படலத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஆனந்தியைத் தன் துணைவியாகக்கொள்ள வேண்டியதுதான் தன் வாழ்வின் அடுத்த அத்தியாயம் என்று முடிவு செய்தான்.
பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/67
தோற்றம்