பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்



பழம்பாலும் கொண்டுவரப் பணித்தார். வேண்டாம்
பலகாரப் பழுவயிற்றில் தாங்கா துங்கள்
தொழில்துறையை நேரில் பார்த் துணர என்னைத்
தொந்தரவிக் கவிஞன்செய வந்தே மென்றான்

'ஒரினமும் ஒருகுலமு மாயுள்ளோம்நாம் ;
உங்களுக்கென்னனுமதியும் வேண்டு மோ? வென்
நீரிரண்டு முகங்களிலும் எழில்வி ளங்க
எழுந்துநடந் திடலானார் எங்க ளோடே
'பாரினிலே முன்னைப்போல் படைக்க நானும்
பழங்கிழவன்; இயலவில்லை; பதுமத் தின்மேல்
பேருக்கா யிருப்பதன்றிப் பிறப்பு வேலை
பிள்ளையின்மேற் பார்வையில்தான் இயங்குதென்றான்

பட்டென்று விளங்கிற்று, பாரி லின்று
பாவிகளின் தொகைபெருகும் கார ணந்தான்
கட்டுக்குள் ளடங்காமல் கோபம் வந்தால்
கதை பேச வேண்டாம்பின், 'ஐயா ! பாரும்;
சட்டென்று நீருமது பதவி தன்னைத்
தான் நீக்கம் செய்திடுவீர், தயவு செய்து !
மட்டரக மனிதர்களே மலிந்தார்; மேலே
'மண்ணுலக மினித்தாங்க மாட்டா' தென்றேன்

பிரமனுக்கு முகம்நான்கும் கறுகிப் போகப்
பேசுவதற் கெதுவொன்றும் பிரியா தாகச்
சிரங்குனிந்த படியிருந்து சீராயென்சொல்
சிந்திக்கச் செய்ததுகாண் சிறிது போழ்தில்
பரமாணுச் சக்திகுண்டு வெடித்த தென்னப்
படீரென்ற பேரொலியால் துள்ளி வீழ்ந்தேன்
பிரமனையும் நண்பனையும் காணோம் ! பேதைப்
பிள்ளைபலு னுதியது வெடித்த தன்றே !

106