உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


          ஒமெனும் சொல்லுக் கொருகுறள்பா -வாமெனவே
          வெள்ளத் தனைய மலர்நீட்டம், மாந்தர்தம்
          உள்ளத் தனைய துயர்வு

மேற்கண்ட வெண்பா திருக்குறளை நூலாசிரியர் எடுத்தாண்டுள்ள சிறத்தினை விளக்கும் சான்றாகிறது. குறளையோ, தொடரையோ, கருத்துக்ளையோ அப்படியே எடுத்தாண்டுள்ளார்.

          திருக்குறள் கற்றுத் தெளியாதான் சிந்தை
          செருக்கிருள் பற்றிச் செறிந்து - கருக்கிருளாய்
          வீடெங்கும் வெட்கம் விளைவித்து விட்டுளதால்
          நாடெங்கும் நட்பு நலித்து

இவ்வெண்பா கவிஞர் திருக்குறள் மீது கொண்டிருந்த பற்றினை ாாக்கும் சான்றாகிறது. இவரது நோக்கம் குறட்கருத்துக்களை பகாள் அறிந்து தெளியவேண்டும் என்பதேயாகும். தலைவன் எனும் க. பாவியத்தில் இழையோடிச் செல்லும் இப்பண்பு விளைவிக்கும் பயன. சமுதாயத்தின் கடைத்தேற்றம் என்ற ஒன்றேயாகுமெனில் மிகையில்லை. இவற்றோடன்றி இந்நூலில் அணியிலக்கணம் கூறும் உவமை, உருவகம் முதலான அணிகளும் பயின்று சிறந்துள்ளன. இலக்கிய இன்பம் காணவிழைவோர்க்கும் இன்பப் புதையலாகுந்தன்மைக்குச் சில காட்டுக்களைக் காணலாம்.

          காலைக் கமலம் கதிரோன் வரவேற்கச்
          சோலைக் குயில்வாழ்த்தச் சூக்குமமாய் மாலைக்
          கலையைத்தன் காதலிக்குக் கற்பித்தான் கண்கள்
          தொலையாய்த் தொலைக்கும் துயில்.

இவ்வெண்பா உருவக அணி பொதிந்து சிறந்துள்ளது.

27