கவிஞர் சக்திக்கனல்
'கவிஞரும் கலைமணியும்'
முதுபெரும் கவிஞர் வெள்ளியங்காட்டான் அவர்கள் என் மதிப்புக்கும் அன்புக்கும் உரியவர். நல்ல சிந்தனையாளர். பகுத்தறிவாளர். அழகுத்தமிழில் இனிமைதவழ்ந்திடக் கவிதைதரும் கவிஞர். நாங்கள் 1964-ல் கோவை தமிழ் எழுத்தாளர் மன்றம் என்ற இலக்கிய அமைப்பை நிறுவி நடத்தி வந்தோம். அவ்வப்போது இளைய தலைமுறையின் எண்ணங்களை வெளியிடும் வண்ணம் சுமார் 50 கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டோம். பல பிரபல கவிஞர்களின் கவிதைகளையும் அதில் சேர்த்தோம். எழுக கவிஞ என்ற அந்தக் கவிதைத் தொகுப்பில் சிறப்பிடம் பெற்றது கவிஞர் வெள்ளியங்காட்டான் அவர்களின் துணிவு என்ற கவிதை.
"வாழ்வும் சாவும் உண்மைகள்
பிஞ்சு கனியாகிறது-கனி உதிர்கிறது
இதை நான் நன்கு உணர்ந்து கொண்டேன்.
எனவே எனக்கு இனி வாழ்க்கையில் அச்சமில்லை,
ஆம் என் எண்ணங்கள் உயர்ந்தவை.
நான் ஒரு சிறுசெடி நிழலில் இளைப்பாறி
அற்ப மகிழ்ச்சி எய்த மாட்டேன்.
கொதிக்கும் ஆரியன் என்னைச் சுட்டெரித்தாலும் சரி-எனக்கு
வேண்டியது கற்பகத் தருவின் நிழல்- அதை நான்
அடைந்தே தீருவேன்".
30