பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவர் தமிழில் விரும்பியது எல்லாம் தொன்மை இலக்கியங்களே!வள்ளுவம், புறநானூறு போன்றவை இரத்தத்தோடு மட்டுமல்ல அவரது உயிரோடும் கலந்து விட்டது எனலாம்.

கலில் ஜிப்ரானை மிகவும் நேசித்தார். ஒவ்வோர் எழுத்தும் ஒரு வைரம் எனப் புகழ்ந்துரைத்தார். சரத்சந்தரர், வி.ஸ. காண்டேகர் போன்றவர்களின் இலக்கியங்களை விரும்பினார். ரஷ்ய நாவல்கள் அவரைப் பெரிதும் ஈர்த்தன. வே.மா. என்னும் இளைஞர் கவிஞர், இம் மாதிரியான இலக்கியங்களைக் கொடுத்து உதவினார். மூடப்பழக்க வழக்கங்கள் எப்போதும் அவருக்கும் பெரும் சினத்தை மூட்டியது. அது தவறு என்று சுட்டிக்காட்டி, விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த, தந்தை பெரியாரைப் போல மேடைகளில் அல்லாதுதம் எழுத்துகளின் மூலம் அறிவுறுத்தப் பெரிதும் முயன்றார். தமக்குப் புற்றுநோய் எனத் தெரிந்து கொண்டதும், தான் அறிந்து கொண்டதை மக்களுக்கு ஆதாரத்தோடு விளக்க, மீண்டும் சந்தேகவுண்டன்பாளையம் என்ற கிராமத்திற்குச் செல்ல நேர்ந்தது. உதாரணமாக 1980 செப்டம்பர் மாதம், கஸ்தூரி என்ற கன்னட மொழிப் பத்திரிக்கையில், தான் படித்த செய்தி பற்றிக் கூறுகிறார்:

"கிருஷ்ணா! நான் எத்தகைய பேரழகியாக இருந்தேன் தெரியுமா? எங்கள் காந்தார நாட்டுப்புரத்துச் சாரல்களில், குறை கூற இயலாத படிகம் போன்ற நீர் நிலைகளின் அருகில் நின்று கொண்டு என்னை நானே பார்த்துப் பிரமித்து விடுவேன். தோழிகள் என் அழகில் மயங்கி, என் எதிர்காலக் கனவுக் கதைகளையும் பின்னிக் காட்டுவார்கள். அந்தோ அங்கேயே முடிந்து போயிற்று என் பேரழகு. அதற்குப் பிறகு நான் என்னைப் பார்த்துக் கொள்ளவில்லை. இது விதிவசமன்று வீட்டுமனின் படைபலமாம்! யுத்தம் வந்தால் மக்கள் வினாக மடிய நேரிடுமே என்று, இரக்கம் மிகுதியால் என் தந்தை என்னை இக்குருடருக்குத் தாரை வார்த்துத் தர நேரிட்டது.

"பிறகு என்ன வேண்டியிருந்தது? அன்றே நானும் அஸ்தினாபுரியின் அரசியானேன். அரண்மனைத் தாசி ஒருத்தி அறிவுறுத்திய பிறகே, தனக்கு ஒரு மனைவி இருந்தது அவருக்குத்-

57