பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நான் நொய்யலாற்றில் குளித்துத் திளைத்துக்காவியம் எழுதுகிறேன், என ஒரிரு மாதத்தில் மீண்டும்தன்னந்தனியாக அவர் சென்றபோது, அந்தப் பென்சன் மிகவும் உதவிகரமாக இருந்திருக்கும். ஆனால் அந்தத் துரதிர்ஷ்டம் பிடித்த மனிதருக்கு அதுவும் வாய்க்கவில்லை. அரசு பணத்தைத் தின்னவும் கொஞ்சம் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டுமே !

அவரைப் புற்று நோய் தாக்கியபோது, நான் பரிவோடு கேட்டேன், "ரொம்ப வலிக்கிறதா அப்பா !" என்று,

" நான் ஒரு கவிஞன் அம்மா! இந்த நோய் எனக்கு ஒரு பொருட்டல்ல! இதை எதிர்த்துப் போராடுவேன். வெற்றியும் பெறுவேன். ஆனால் நீ ஒரு சாதாரண மனிதனைக் கேட்பதுபோன்ற ஒரு கேள்வியை என்னைப் பார்த்து எப்படிக் கேட்கத் தோன்றியது ? நீயே என்னைப் புரிந்து கொள்ள வில்லை என்றால்,யார் என்னைப் புரிந்து கொள்வார்கள்?" என்ற இதயத்தைத் தொடும் அந்த குரல் -

சந்தேகவுண்டன்பாளையம் கருப்புசாமிக் கவுண்டர் அவர்களின் தோட்டத்து வீட்டுத் திண்ணை மீது தடுக்கு வைத்து மறைக்கப்பட்ட சிறிய அறை ஒன்று. அருகிலே ராசு, பழனிசாமி என்பவர்கள், அப்பா அங்குத்தங்கியிருந்தபோது, அவருக்கு சிறுசிறு உதவிகள் செய்து கொடுத்தனர். அங்குத்தான் சில காவியங்களையும் எழுதினார். அவர் நொய்யலைக் காதலித்தார். தன் உடல் அதன் கரையில் உறங்க வேண்டும் என மிகவும் விரும்பினார். நொய்யலைப் பற்றிய நினைவுகளைக் கவிதைகளாக்கினார்.

"இலக்கணத்தை என்னிடம் கற்றுக்கொள் 1. உன்னிடம் ஆற்றலிருக்கிறது. அறிவிருக்கிறது. அதைச் சிறந்த முறையில் பயன்படுத்த, முறையான கல்வி இலக்கணம் அவசியம்" என வலியுறுத்தினார். ஆனால் அவர் அதைக் கற்பித்தபோது உணவும் உடையும்தான் என் முதல் தேவையாக இருந்தது. வயிறு காலியாகும் போது இலக்கணம் உணவாக முடியுமா என்ன?

56