உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



"அம்மா ! நான் ஒரு கவிஞன் என்பதையே நீ மறந்து விடுகிறாயே! கேட்டது நீ என்றால் உன்னிடமே கொடுத்திருக்கலாமே!” என்றார்.

" உங்களிடமே அப்பணம் கொடுக்கப்பட வேண்டும். எதற்கு கேட்கப்பட்டதோ அதற்கே பயன்பட வேண்டும் என்று, அவர்கள் நினைத்திருக்கலாமல்லவா? அப்படி இல்லையென்றால் பணத்தை உடனே கொடுக்கச் சொன்னது எதற்காக?" என்றேன்.

" உதவிய நோக்கம், உயர்ந்ததும் பாராட்டுக்குரியதும் தான் அம்மா! கவிஞன் என்ற நிலையில் அதை பெற்றுக் கொள்ள என் மனம் இடம் தரவில்லையே" என்றார்!

குன்றும், மலையும் பலபின் ஒழிய-

என்ற பாடல் சங்க காலப் புலவர்களுக்கு மட்டுமே சொந்தமில்லை, இன்றும் கொங்கு நாட்டில் -

காணாமல் கொடுக்க ஒரு வள்ளலும்-
காணாமல் பெற மறுக்கும் ஒரு கவிஞனும்-

இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதென்னவோ உண்மைதான்.

அது மட்டுமல்ல, ஒரு காலத்தில் வறுமையின் பிடியிலிருந்து விடுதலைபெற ஆலையில் பணியைக் கொடுத்ததன் மூலமாக எங்களை மீட்டு உதவிய உயர்ந்த உள்ளம் கொண்டதிரு. ஜி.கே. எஸ் அவர்களுக்கு இந்நூலின் மூலமாக என் நன்றியைக் கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்.

1979-ல் கிடைத்த எண்பது ரூபாய் பென்ஷன் 1981-ல் அதிகரிக்கப்பட்டது! ஆசிரியரான என் அண்ணாவின்வருமானத்தோடு பென்சன் தொகையைப் போட்டால், சில ரூபாய்கள் அவர்கள் நிர்ணயித்ததைக் காட்டிலும் அதிகமாக வருகிறது என்று அந்த பென்ஷன் தொகையும் மறுக்கப்பட்டது. ஆனால், ஒரே ஒரு பொய் - நான் தனியாகத்தான் இருக்கிறேன், என்று கூறியிருந்தால், அந்தப் பென்சனையாவது பெற்றிருக்கலாம். ஆனால்

55