பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


பாட்டன்

சின்ன வயதில் சிறுமை யுறாதொரு
செல்வக் குழந்தையென - வளர்ந்தேன்
சீரும் சிறப்புடனே !
என்னை யியல்புடனேந்தி மகிழ்ந்தனர்
இல்லத்தில் யாவருமே - என்றன்
இதயம் இனித்திடவே !

வீட்டி லிருந்தவர் வேக விரட்டியே
வேலையை வாங்குபவர் - எல்லா
விவரமு முள்ளவரென்
பாட்டனா ரென்பதை யூட்டி வளர்த்திடும்
பாட்டியும் நன்கறிவான் - பாயும்
பசுவும்கன் றும்மறியும் !

பருத்துச் சரிந்த வயிறும், வழுக்குப்
பனம்பழம் போல் தலையும் - கண்கள்
பாக்குப் பழங்களுமாய்,
நரைத்த புருவம் முறுக்கிய மீசை
நமுட்டுச் சிரிப்புடனும் - சிவந்து
நன்கு வளர்ந்திருப்பார் !

ஆசை முழுவதும் காசுமேல் வைத்தவர்
ஆயினும் அன்புடனே - என்மேல்
ஆருயிர் வைத்திருந்தார் !
'காசு பணத்தினில் பாசம் படியவே
கற்றுனக் குத்தருவேன் - வாடா
கண்மணி' யென்றழைப்பார் !

'இருளை யொளியென் றியம்பலாம் நல்ல'
இனிப்பைக் கசப்பெனலாம் - ஏழை
இதயம் மயக்கிடலாம் !

86