பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


பொருளைத் திரட்டின் பெறலரி தில்லையிப்
பூதல மீதி லென்பார் ! - இதனைப்
புத்தியில் வைத்திரென்பார் !

'பணமுள்ள வன்பல வானெனும் பண்டைப்
பழமொழி யைப்பகர்வார் ! - அதன்
பயனையும் பன்னிடுவார் !
குணமுள்ள வன்மணம் கூட்டக் கருதிடின்
கொள்க இதனை யென்பார் ! - குறிக்
கோளிது வென்றுரைப்பார் !

இல்லாத வல்ல இறைவ னியங்குதல்
என்னும் படியெனது - சிறிய
இதயமெல் லாம் தனது
பொல்லாத ஆசை புகுத்தப் புகுந்தஅப்
போக்கினி லேவொருநாள் ; - கொஞ்சம்
புதிரான நாளதுவே !

படுத்த படுக்கையில் பந்து சனங்களும்
பார்த்துப் பதறிடவே, காலன்
பக்கத்தில் வந்திடவே,
கொடுத்தது வாங்கின தவ்வள வும்சொல்லிக்
கொண்டு குலைபவராய்ப் - பாட்டன்
குற்றுயி ராய்க்கிடந்தார் !

நீட்டிய கைகளும் கால்களு மான
நிலையில் நிலைகுலைந்து - பாட்டன்
நினைவு மறக்கையிலே,
'பாட்டனே ! இந்தவுன்சாவைத் தவிர்த்திடு
பத்துப் பவுன்கொடுத்தே' - என்றேன்
பரபரப் பாய்ப்பரிந்தே !

87