பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் வெள்ளியங்காட்டான்


விளக்கற்ற வீடு

உலகி லிருள்புக உதவி செய்துவிட்
டொளிந்து கொண்டனன் கதிரவன் - இருள்
விலக அகல்விளக் கேற்றி அன்னை
வெளிச்சமாக்க விரும்பினாள்.

அந்தி வேளையில் வந்து சேர்ந்தெமை
யடக்கி யாள்பவன் சீறினான் ; -இனி
இந்த அகல்விளக்கேற்றி டேலிதற்
கெண்ணை வார்ப்பதற் கிலையென.

'விடுங் கூடவுன் விதியைப் போன்று
வெளிச்ச மற்றிட வேண்டுமா? - அட
கேடு கெட்டவனே ! இதற்கொரு
கேள்வி முறையென இல்லையா? ...'

பெற்ற வயிறது பற்றி யெரிந்தது ;
பிள்ளை யெனுனம்பிணிப் பின்றியே - தாய்
குற்றங் குறைகளைச் சுட்டிக் கூறிக்
குரல்கொடுத்தனள் கோபமாய் !

'எண்ண றந்தெளிந் தெழுத்த றப்படித்
திருந்த போதிலு மென்ன நீ - ஒரு
பெண்ணெ னும்மடப்பிறவி! புத்தியும்
பேத மைத்' தெனப் பேசினான்.

'வேறு விளக்கெது மில்லை ; விரைவில்
வெளிக்கி ளம்பிடும் வெண்ணிலா ! - நீ
மாறு கூறியுன் மனது மாழ்கல்
மறந்தி டென்றனள் தங்கையும் !

தமயன் தானிவன் தம்பி நான் ; - ஒரு
தாயின் பிள்ளைகள் தரணியில் - ஈன்
றமுத மூட்டிய அன்னை யின்றெமது
அவலங் கண்டழு கின்றனள்.

88