பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மறந்த அடியவர்-அமைச்சர் 16懿 எனப் பலவகையில் உவமை உருவகங்களால் விளக்கி அவற்றி. லிருந்தெல்லாம் தம்மைக் காத்த தனித் தன்மையைப் பாராட்டுகின்ருர். இவ்வாறு இவர் உவமைகள் எண்ணி: எண்ணி மகிழற்பாலன. உள்ளன பல; காட்டியன மிகச் சிலவே. இப்படியே மணிவாசகர் பல பழமொழிகளையும். எடுத். தாளுகின்ருர். ஓரிரு காட்டுக்கள் போதும். - பொறுப்பரன் றேபெரி யோர்சிறு நாய்கள்தம் பொய்யினையே (6-6) மெள்ள வேமொய்க்கும் நெய்குடங் தன்னை எறும்பு (6-24). எறும்பிடை காங்கூழ் (6-25). பலாப் பழத்து ஈ (6-46). என்பன சில. இவ்வாறு இலக்கியம் பாடும் பல புலவர்கள் போன்று மணிவாசகர் தம் திருவாசகத்தை இலக்கியப் பூங்காவாக அமைக்கின்ருர் என்பதனேடு அமையாது, இவை அவரைத் "தம்மை மறந்தார்’ என்பதை எப்படிக் காட்டுகின்றன என் பதையே நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். மணிமொழி: யார் திருவாசகமே யன்றித் திருக்கோவையாரையும் பாடினர் என்பர். அக்கோவையாரைப் பற்றிப் பின் எழுந்த ஒரு பாடல் அதன் சிறப்பை நன்கு உலகம் உணரச் செய்கிறது. அதே பாடலின் கருத்துத் திருவாசகத்துக்கும் பொருந்துவ தாகும். - ஆரணங் காணென்பர் அந்தணர் யோகியர் ஆகமத்தின் காரணங் காணென்பர் காமுகர் காமகன் நூலதென்பர் ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர் சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே என்பது கோவையாருக்குரிய பாயிரம். இதே கருத்துத் திருவாசகத்தில் பெண்கள் கலந்து பாடுவது போன்று.