பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 - வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் இறையருள் எப்படியும் நமக்குக் கிட்டும் என்ற உணர் வில் தம்மை மறந்தால் அழுகைதோன்றும்; அவ்வழுகை தமக்காக அன்றிப் பிறர்க்காகவே இருக்கும். அவ்வாறு தாம் அழும் நிலையை உயிர்மேல் ஏற்றி மாணிக்கவாசகர், கல்கா தொழியான் நமக்கென்றுன் நாமம் பிதற்றி நயன நீர் மல்கா வாழ்த்த வாய்குழரு வணங்கா மனத்தால் கினைந்துருகிப் யல்கா லுன்னைப் பாவித்துப் பரவிப் பொன்னம் பலமென்றே ஒல்கா நிற்கு முயிர்க்கிரங்கி அருளாய் என்னை உடையானே. (21-10) எனப் பாடிக் கசிந்து கசிந்து கண்ணிர் பெருக்கி வேண்டு கின்ருர். இந்த அழுகையைத்தான் பின் வந்த அடியவர் மணிவாசகர் மேலேற்றி அழுதடி அடைந்த அன்பன்' என அவரைச் சிறப்பித்தனர். எனவே தம்மை மறந்தவர் பிறர்க் கென அழுபவர் என உணர்தல் வேண்டும். தம்மை மறவாத வரே தமக்கென அழுபவர். இனி இவ்வாறு அழும் அடியார் களிப்பு வரும்போது செம்மாந்து திரிவார்களோ? ஒருக்காலும் திரியார். தம்மை உயர்த்த எண்ணுவோரே இன்பத்தில் ஏமாப்பதும் துன் பத்தில் வாடுவதும் செய்வர். ஆனல் தம்மை மறந்த அடி யவர் துன்பம் பிறரைப் பற்ருவகையில் வாடியும் வருந்தியும் நின்று, அதே வேளையில் களிப்புமிகின் அதன் முடிவு என்னுகுமோ எனக் கலங்கி நிற்பர். வளைக்கை யாளுெடு மலரவனறிய வான வாமலே - மாதொருபாகா களிப்பெ லாம்.மிகக் கலங்கிடு கின்றேன் கயிலை மாமலை மேவிய கடலே (23-10) என்பது மணிமொழி. இதுவே தம்மை மறந்தவர் நிலை. இவ்வாறு தம்மை மறந்த மாணிக்கவாசகர் தாம் பாடிய ஒவ்வொரு பாட்டிலும் ஒவ்வோர் அடியிலும் உயர்ந்த தெய்வ நெறியையே காட்டிச் செல்கின்ருர். ஒவ்வொரு