பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மறந்த அடியவர்-அமைச்சர் 113 சொல்லும் அவர் புராணம் காட்டுவதுபோன்று தித்திக்கும் மணிவார்த்தை'யாகவே அமைகின்றது. அதனுல்தான் போலும் ஆண்டவனே இப்பாடல்களைத் தானே எழுதிக் காப்பிட்டுத் தில்லையின் எல்லையில் நாமெலாம் பெற்று உய்யுமாறு இட்டுச் சென்ருன். இத்தகைய பாடல்கள் அனைத்தையும் ஈண்டு ஆராய்ந்து, அவர்தம் மறந்த நிலை யில் அவர் வாழ்ந்த தெய்வநெறி வாழ்க்கையை ஒரே ஒரு பத்தின் ஒருசில பாடல்கள்வழிக் காட்டி அமைக்கின்றேன். குழைத்த பத்து என்பது வாசக வரிசையில் முப்பத்து மூன்ருக அமைவது. அதற்கு ஆத்தும நிவேதனம்’ என்ற பெயர் தரப் பெற்றுள்ளது. அதன் பொருளே தன்னை மறத் தல்தான். தன் உயிரை ஆண்டவனுக்கு நிவேதித்த பிறகு "தான்’ என்ற ஒன்று எங்கே இருக்கப் போகின்றது? நான் யார், என் உள்ளமார், ஞானங்களார்?’ என்ற கேள்வி அற்ற இடம் அது. அங்கே இறைவனும் தானும் இயைந்த பெரு மையைக் காணமுடிகின்றது. அந்த உண்மை நிலையைக் கானலாம். இறைவனுடைய தாளைப் பற்றிய உயிர்அனைத்துக்கட்டுக் களிலிருந்து விடுதலை பெற்ற ஒன்றுதான் எனினும், இறைவன் அவ்வுயிர்களை மேலும் மேலும் சோதனைக்குள்ளாக்குவான். "சுடச்சுடரும் பொன்போல் அந்த அடியவர்தம் தூய்மை நன்கு விளங்கும். அடியவர் தூய்மையை ஆண்டவன் நன்ருக அறிவார் என்ருலும், அதை உலகுக்கு எடுத்துக் காட்டுவதற் காகவே அவன் நல்லுயிர்களுக்குப் பல சோதனைகளைத் தரு கின்ருன். இறைவனிடம் அத்தகைய சோதனைகளைப் பெற்றவர் மாணிக்கவாசகர் என்பதை அவர்தம் வரலாறு நன்கு காட்டும். எனவே அவ்வப்போது பல்வேறு இடர்கள் அவரைப் பற்றுகின்றன. தம்மை மறந்த நிலையில் அவற்றை அவர் பொருட்படுத்தா திருந்தபோதிலும், இறைவனடியார் இன்னலுறின் அது இறை நிலைக்கு இழுக்காகும் என்ற உணர்வில் அவ்வப்போது அவ்வாண்டவனே முன்னிறுத்திப் பல வேண்டுதல்களைச் செய்கின்ருர். ஆயினும் அவ்வேண்டுதல் .கள் தேவையா என்ற கேள்வியும் அவர் உள்ளத்தில் பிறக்