பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் கின்றது. மற்றும் தன்னை முற்றும் இறைவனிடத்து ஒப் படைத்த பிறகு தனக்கென ஒரு செயலும் இல்லையே. நல்லது. செய்யினும் அல்லது செய்யினும் அவனைப் பற்றியதாகவே அவை அமையுமன்றே? அவ்வாறன்றி வேறு ஏதேனும் வேண்டும் வகையில் உள்ளம் செல்லும். உடல் பொருள் உயிர் மூன்றையும் தனக்கே உரிமையாக்கிக் கொண்ட இறைவழி அமைந்தஉள்ளத்தில் தோன்றும் விருப்பமும் அவ்விறைவனைச் சார்ந்ததுதானே? இதுவே அணைந்தோர் நிலையன்ருே? இவை: அனைத்தையும் எண்ணிப் பார்த்த அவர் உள்ளம் வாய்விட்டே. பாடுகிறது. - வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட முழுதும் தருவோய்நீ வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி என்னைப்பணி கொண்டாய்: வேண்டி நீயா தருள்செய்தாய் யானு மதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்ேற (33-6). என்பது அவர்பாடல். இதன் கடைசி அடிக்கு வேறு பொருள் கொள்வார் உண்டேனும் நாம் மேலே கண்ட அனைத்தையும் ஆராயின் அவன்வழிச் சார்ந்து நின்ற ஒன்றிலேயே அது. சென்று முடியும். இவ்வாறு முற்றும் தன்னை இறைவனிடம் ஒப்படைத்த உயிருக்கு நன்மை தீமையும் உண்டோ? என்று இறைவன் ஆட்கொண்டானே அன்றே உயிரின் தனித்தன்மை அற்றது. எனவே அதன் விருப்பு வெறுப்போ நன்மை தீமையோ இல்லை. யாயிற்று. ஆகவே அதற்கென ஒன்றுமில்லை; அனைத்தும் இறையருள் என்றிருத்தலே தம்மை மறந்த அடியவர் செயல். மணிமொழியார் இந்தப் பேருண்மையை, அன்றே என்றன் ஆவியு முடலும் உடைமை எல்லாமும் குன்றே யனையாய் என்னையாட் கொண்ட போதே கொண் டிலையோ